அங்குசம் சேனலில் இணைய

அங்குசம் பார்வையில் ‘பல்டி’ 

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : எஸ்டிகே ஃபிரேம்ஸ் சந்தோஷ் டி.குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர், டைரக்‌ஷன் : உன்னி சிவலிங்கம். ஆர்ட்டிஸ்ட் : ஷான் நிகேம், சாந்தனு பாக்யராஜ், செல்வராகவன், ப்ரீத்தி அஸ்ரானி, பூர்ணிமா இந்திரஜித்,  அல்போன்ஸ் புத்திரன், ஒளிப்பதிவு : அலெக்ஸ் ஜே.புலிக்கல், இசை : சாய் அபயங்கர், எடிட்டிங் : சிவக்குமார் வி.பணிக்கர், ஆர்ட் டைரக்டர் : ஆஷிக், வசனம் : டி.டி ராமகிருஷ்ணன், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : சந்தீப் நாராயண், தமிழ்நாடு ரிலீஸ் : ஃபியூச்சர் அப் & ஏஜிஎஸ், பி.ஆர்.ஓ : யுவராஜ்.

உதயன்[ஷான் நிகேம்], குமார் [சாந்தனு பாக்யராஜ்] மற்றும் இருவர் பஞ்சமி அணியின் கபடி வீரர்கள். எதிரணியான பொற்றாமரை அணியை வீழ்த்தி கப்பை கைப்பற்றுகிறார்கள். இந்த பொற்றாமரை அணியின் ஓனர், பிரபல கந்துவட்டி தாதா பைரவன் [செல்வராகவன்]. அதே கந்து வட்டித் தொழிலில் இவருக்கு எதிர் கோஷ்டியாக இருக்கிறது  சோடா பாபுவும்  [ அல்போன்ஸ் புத்திரன்] கெளரியும் [ பூர்ணிமா இந்திரஜித் ]. நான்கு நண்பர்களின் கபடித் திறமையை அறிந்து அவர்களுக்கு விலைபேசி தனது பொற்றாமரை அணிக்கு விளையாட வைக்கிறார் பைரவன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தனது அடியாட்களாக மாற்றுகிறார். அதன் பின்  அந்த நான்கு இளைஞர்களின் கதி என்ன? என்பதன் க்ளைமாக்ஸ் தான் ‘பல்டி’.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பல்டி மூவிகபடி விளையாட்டில் ஷான்நிகேம் பல்டி அடித்து எதிரணி வீரர்களை அவுட்டாக்குவதில் கில்லாடி. இதே போல் டேஷ் அடிப்பதில் எக்ஸ்பெர்ட் சாந்தனு பாக்யராஜ். வாழ்க்கைத் தேவைக்காக காசுக்காக கபடி விளையாடும் இவர்கள், செல்வராகவனின் கூலிப்படையில் சேர்ந்து தாதாக்களாக மாறிய பின் இவர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் தடம் புரள்கிறது என்பதை வெட்டுக்குத்து, ரத்தச் சகதியாக  பதிவு செய்திருக்கிறார் டைரக்டர் உன்னி சிவலிங்கம்.

இடைவேளை வரை கொஞ்சம் ஏனோதானோவென படம் நகர்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பின்  ஷான் நிகேமும் சாந்தனுவும் அவரது நண்பர்களும்  சோடா பாபுவுடன் மோதி, அவரை ஜெயித்த பிறகு, செல்வராகவனின் குள்ளநரித்தனம் வேலை செய்கிறது. இதன் பிறகு தான் படம் சூடுபிடிக்கிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மலையாள ஹீரோ ஷான் நிகேமுக்கு ஈக்குவலாக நம்ம சாந்தனு பாக்யராஜுக்கு வெயிட்டான கேரக்டர்கள் கொடுத்திருக்கிறார்கள். வலது கையால் இடதுபக்கம் சட்டையைத் தூக்கிவிட்டு நடப்பது, கபடியில் பல்டி அடித்து வீரர்களை அவுட்டாக்கியதும் வலது தொடையில் தட்டி கையை நீட்டுவது, ஆக்‌ஷன் காட்சிகளில் அதிவேகம் என ஷான் நிகேம் நன்றாகவே ஷைன் பண்ணியிருக்கிறார். இவரின் நெருங்கிய நண்பனாக சாந்தனு பாக்யராஜும் வெரைட்டியான பெர்ஃபாமென்ஸ்களில் அசத்துகிறார். குறிப்பாக க்ளைமாக்ஸில் “எல்லாம் உன்னால தாண்டா” என ஷான் நிகேம் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாகும் சீனில் கவனிக்க வைக்கிறார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

பல்டி மூவி ஆனா இவர் உண்மையான நண்பனா? துரோகியா? பூர்ணிமா இந்திரஜித் ஏன் சாந்தனு மீது மட்டும் அக்கறை காட்டுகிறார்? என்பது தான் நமக்குப் புரியவில்லை.

எக்ஸ் எல் வட்டி, ஜம்போ வட்டி, ராக்கெட் வட்டி என சிரித்துக் கொண்டே கொடூரம் புரியும் பைரவன் செல்வராகவன் செம ஃபிட். “டேய் முத்து.. சின்னப் புள்ளய இப்படியாடா பண்றது” என கண்களைச் சிமிட்டி, சிரித்து குரூரத்தைக் காண்பித்து மிரள வைக்கிறார்.

இன்னொரு கந்து வட்டி தாதாவாக அல்போன்ஸ் புத்திரன், பெண் தாதாவாக பூர்ணிமா இந்திரஜித் ஆகியோரும் செம வில்லன், வில்லி தான். ஹீரோயின் ப்ரீத்தி அஸ்ரானிக்கு மொத்தமே நான்கைந்து சீன்கள் தான். கேரக்டர் பேர் காவேரி என்பதால் கொஞ்சம் டல் மேக்கப் போட்டுவிட்டார்கள் போல.

இடைவேளைக்குப் பின்பு சகட்டுமேனிக்கு சதக் சதக்குன்னு கத்தியால குத்திக் கிழிக்கிறார்கள். நமக்குத் தான் பதக் பதக்குன்னு ஆகிபோச்சு. அது சரி, உன்னி சிவலிங்கம் சாரே…. ஹீரோ ஷான் நிகேம் கிட்டத்தட்ட முப்பது பேரை போட்டுத் தள்ளிடுறாரு. அதுக்கப்புறமும் போலீஸ் வேலையில சேர முடியுமா?ஷ

எண்ட குருவாயூரப்பா… இதுக்கு நீதாம்பா பதில் சொல்லணும்.

 

   —    ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.