சமூகவலைத்தளத்தினால் திருந்திய சவுக்கு சங்கர் !
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் மனைவி நிலவுமொழி செந்தாமரை தனது முகநூலில் சவுக்கு சங்கர் குறித்து சமூகவலைத்தளத்தினால் திருந்தியதற்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதை அப்படியே தருகிறோம்…..
சங்கர் முன்பு இரண்டு முறை என்னுடைய வீட்டிற்கு வந்த பொழுது, குடித்துவிட்டு வந்து, குழந்தையை மிரட்டிவிட்டே சென்றிருக்கிறான். முதல் முறையாக, இன்று குடிக்காமல் வந்து, குழந்தையை வெளியில் கூட்டி சென்றுள்ளான். சமூகவலைதளங்களின் தாக்கத்தினால், எனது மகன் இன்று மகிழ்ச்சியில் உள்ளான். குழந்தையை பொங்கலுக்கு கூட்டிச் செல்வதாக சொன்னதுடன், குழந்தையை அவனே வளர்ப்பதாகவும், வாக்குறுதி அளித்துள்ளான். இதுவரை என்னுடைய அன்பை மட்டும் பெற்று வந்த தியோ, இனி அப்பாவுடன் வளரப்போகிறான். நான் வார இறுதிகளில் அவனைப் பார்ப்பதற்கான உரிமையைப் பெற்று, அவன் மீது அன்புடன் இருப்பேன்.
சமூக வளைதளத்தினால் திருந்தியுள்ள உனக்கு வாழ்த்துகள். என்னை அடித்தது போல், குடித்துவிட்டு குழந்தையை அடித்து, அதற்காக சிறை செல்ல மாட்டாய். திருந்தியிருப்பாய் என்றே எனது மகனை உன்னுடன் அனுப்புகிறேன். எனது மகனின் பல நாள் கனவு இது; மண்ணள்ளி போட்டு விடாதே.
Be responsible
Shankar A
[…] […]