சாத்தூரில் முன்பகை காரணமாக இளைஞரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மூவர் கைது !
சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை கலைமணியின் உறவினர்கள் முற்றுகையிடவே அவர்களை சமாதானம் செய்த அனுப்பி வைத்த காவல்துறையினர் மூன்று நபர்களையும் தேடிப் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சாத்தூரில் முன்பகை காரணமாக இளைஞரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மூவர் கைது !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த செல்வம் இவரது மகன் கலைமணி வயது 32 இவர் அருகில் உள்ள தனியார் அரிசி ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார், அதே பகுதியைச் சேர்ந்த வீர அபி மன்னனும் ஒன்றாக அதே அரிசி ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார், இதற்கிடையில் வீர அபி மன்னனை ஆலை உரிமையாளர் பணியில் இருந்து நீக்கியுள்ளார்.

தன்னை பணியிலிருந்து நீக்கியதற்கு கலைமணி தான் காரணம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இருவருக்கும் முன்பகை இருந்துள்ளது, இதற்கிடையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இறுதி சடங்கிற்கு இருவரும் கலந்து கொண்டுள்ளனர், அப்போது மயானத்தில் இருவருக்கும் வாக்குவாதம், ஏற்படவே வீர அபிமன்னன் அவரது மகன்கள் வீரபூபதி, வீர அஜய், ஆகிய மூன்று நபர்களும் சேர்ந்து கட்டையால் கலைமணியின் தலையில் அடித்துள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த கலைமணியை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே கலைமணி இறந்து விட்டதாக தெரிவித்தார், இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக மூவரையும் கைது செய்ய வேண்டும் என சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை கலைமணியின் உறவினர்கள் முற்றுகையிடவே அவர்களை சமாதானம் செய்த அனுப்பி வைத்த காவல்துறையினர் மூன்று நபர்களையும் தேடிப் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாரீஸ்வரன், சாத்தூர்.