கடன் வட்டியை அதிகாித்த கூட்டுறவு வங்கி – போராட்டத்தில் ஈடுபட்ட பெல் ஊழியர்கள்
திருச்சி கடனுக்கான வட்டி விகிதத்தை திடீரென உயர்த்தியதால், திருவெறும்பூர் அருகேயுள்ள பெல் நிறுவன வளாகத்தில் இயங்கி வரும் பாரத மிகுமின் ஊழியர்கள் கூட்டுறவு வங்கியை பெல் தொழிலாளர்கள் நேற்று முற்றுகை யிட்டு, போராட்டத்தில் ஈடுபட் டனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத் துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையில் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கான ஊதியம் பெல் நிறுவன வளாகத்தில் இயங்கி வரும் பாரத மிகுமின் ஊழியர்கள் கூட்டுறவு வங்கி மூலம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இருந்து பெல் ஊழியர்கள் பல்வேறு வகையான கடன்களை பெற்று, பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு பெல் கூட்டுறவுவங்கியில் இருந்து வாடிக்கையாளர்ளுக்கு அனுப்பப்பட்ட குறுஞ் செய்தியில், கடன்களுக்கான வட்டி விகிதம் உடனடியாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெல் ஊழியர்கள் நேற்று பெல் தொழிற்சாலை அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளரும், பெல் தொமுச பொதுச் செயலாளருமான கணேஷ்குமார் தலைமையில் வங்கியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொமுச, ஏடிபி, சிஐடியு, பிஎம்எஸ் மற்றும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதுகுறித்து தகவலறிந்த பெல் உயரதிகாரிகள் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட் டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வாடிக்கை யாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தை தற்போது நிறுத்திவைப்பதாகவும். இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றும் அதிகாரிகள் கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.