அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆன்மீகமும், அறிவியலும் -பைபிள் புதிரா புனிதமா?

பைபிள் புதிரா புனிதமா? புதிய தொடர் 8

திருச்சியில் அடகு நகையை விற்க

பைபிள் ( திருவிவிலியம் ) என்பது ஒரு ஆன்மீக நூல் என்பதைத் தாண்டி, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுஅறிவியலாலும் தொல்லியலாலும் உறுதிப்படுத்தப்பட்டது ஒரு பெரிய அதிசயமாகக் இருக்கிறது. காரணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, ஏசாயா 40:22 -ல் “பூமியின் உருண்டை” (Circle of the earth) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் பூமி தட்டையானது என நம்பப்பட்ட நிலையில் இது ஒரு வியப்பான தகவல்.
மனிதர்கள் பூமி ஏதோ ஒன்றின் மேல் தாங்கி நிற்கிறது என நம்பிய காலத்தில், யோபு 26:7-ல் “பூமியைப் பாழிலே (வெற்றிடத்தில்)
தொங்கவிடுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது. இது புவிஈர்ப்பு விசை மற்றும் விண்வெளியில் பூமியின் நிலையை துல்லியமாகக்
காட்டுகிறது.
மேத்யூ மொரி (Matthew Maury) ” கடல்சார் அறிவி யலின் தந்தை” என அழைக்கப்படும் இவர், சங்கீதம் 8:8-ல் உள்ள “கடல்
பாதைகள்” (Paths of the seas) என்ற வசனத்தை ஆதாரமாக வைத்து கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்தார். “பைபிளும்
அறிவியலும் ஒன்றுக்கொன்று முரணானவைஅல்ல, இரண்டும் ஒரே உண்மையின் வெவ்வேறு பக்கங்கள்” என்று உலகிற்கு பகிரங்கமாக அறிவித்தார். நவீன மருத்துவம் இதைக் கண்டறிவதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே லேவியராகமம் 13-ம் அதிகாரத்தில், தொற்றுநோய் உள்ளவர்களைத் தனிமைப்படுத்துதல் (Quarantine) மற்றும் ஓடும் நீரில் கைகளைக்
கழுவுதல் பற்றி கூறப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக தாவீது மன்னன் ஒரு கற்பனை கதாபாத்திரம் என கருதப்பட்டது. ஆனால், பு993-ல் கண்டெடுக்கப்பட்ட ‘டெல் டான் கல்வெட்டு’ (Tel Dan Stele) “தாவீதின் வம்சம்” (House of David) என்ற வாசகத்தைக் கொண்டிருந்தது, இது பைபிள் வரலாற்றை உறுதிப்படுத்தியது. 1947-ல் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சுருள்கள், ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பைபிள் வசனங்கள் மாறாமல் அப்படியே பாது காக்கப்பட்டு வந்துள்ளதை நிரூபித்தன.
லார்ட் கெல்வின் (Lord Kelvin): என்கிற அறிஞர் “நீங்கள் அறிவியலை மிக ஆழமாக ஆராய்ந்தால், அது உங்களை இறை நம்பிக்கையை நோக்கித்தான் அழைத்துச் செல்லும்” அறிவியல் மற்றும் பைபிள் இரண்டும் மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒரு “உயர்ந்த ஆற்றலை” (Directive Power) ஒப்புக்கொள்ள வைக்கின்றன என்கிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தொடரும்…

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஜெ.டி.ஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.