பள்ளி மாணவர்களுக்கு பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு !
திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு வழியாக முனைவர் ஆரோக்கியசாமி அறக்கட்டளை சார்பாக பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு விராலிமலை குன்னத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு வழியாக முனைவர் ஆரோக்கியசாமி அறக்கட்டளை சார்பாக பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு விராலிமலை குன்னத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச தலைமை தாங்கினா.ர்
தாவரவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் டேவிட் ராஜா தாவரங்களின் முக்கியத்துவத்தையும் இயற்கை சூழ்நிலையும் அவற்றின் இன்றைய நிலைகளையும் இத்தலைமுறைகள் அவற்றை எவ்வாறு மாற்ற முடியும் என்று தனது கருத்துரை கூறினார். ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் வின்சென்ட் ஆரோக்கியசாமி சிறப்புiயாற்றினார்.
மழைத்துளி உயிர்துளி என்கிற தலைப்பில் வெற்றி பெற்ற மாணவி யுவராணி பேசினார். சுற்று சூழல் சம்மந்தமாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வந்தவர்களை விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் வரவேற்றார். முடிவில் பள்ளி ஆசிரியர் கிறிஸ்டினா யோகா முராய்ஸ் நன்றி கூறினார். 122 பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பள்ளி வளாகத்தில் நூற்று முப்பது மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பு சூழ்நிலையில் வளர்க்க பள்ளி நிர்வாகம் உறுதி எடுத்து கொண்டார்கள். மக்கும் மாக்காத குப்பைகள் போட குப்பை தொட்டிகள் பள்ளி வழங்கபட்டது. நிகழ்ச்சியின் முடிவில் இயற்கை சம்மந்தமாக ஒலி ஒளி காட்சிகள் காண்பிக்கப்பட்டன.