தமிழகத்தில் கரும்பு விவசாயி சின்னத்தில் பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சி போட்டி – சீமானுக்கு நெருக்கடியா ?

சின்னம் என்ன சின்னம். எண்ணம்தான் பெரிது. எங்கள் கட்சி வேறு சின்னத்தில் போட்டியிட்டால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. என்னுடைய தம்பி, தங்கைகள், உடன்பிறந்தார்கள் அனைவரும் படித்தவர்கள். எங்கள் புதிய சின்னத்தை ...

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கரும்பு விவசாயி சின்னத்தில் தமிழ்நாடு – புதுச்சேரி 40 தொகுதியில்
பாரதியப் பிரஜா ஐக்கியதா கட்சி போட்டி – சீமானுக்கு நெருக்கடியா?

ர்நாடக மாநிலம் வீராரெட்டியால் தொடங்கப்பட்ட தேசியக் கட்சி பாரதியப் பிரஜா ஐக்கியதா என்பதாகும். தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் 13 மாநிலங்களில் போட்டியிடுகின்றது. இக் கட்சிக்குக் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீமானின் நாம் தமிழர் கட்சியின் சின்னமாக இருந்த கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கைத் தொடுத்தது. இவ் வழக்கில் பதில்கூறிய தேர்தல் ஆணையம், “நாம் தமிழர் கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியே. அங்கீகாரம் பெற்ற கட்சி அல்ல. ஆண்டு தோறும் சின்னத்திற்கு விண்ணப்பம் செய்தே பெறவேண்டும். கரும்பு விவசாயி சின்னத்தை முதலில் கோரிய பாரதியப் பிரஜா ஐக்கியதா என்னும் தேசியக் கட்சிக்குச் சட்டப்படியும் முறைப்படியும் வழங்கிவிட்டோம்” என்று கூறியது. நாம் தமிழர் கட்சியின் தொடுத்த வழக்கு டெல்லி உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சிக்குச் சின்னம் பறிபோனது என்று உறுதியானது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நாம் தமிழர் கட்சி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் வழக்கு விசாரணை நாளை (15.03.2024) வெள்ளிக்கிழமை வருகின்றது. அதில் கரும்பு விவசாயி சின்னம் பாரதியப் பிரஜா ஐக்கியதா கட்சிக்கு வழங்கியது செல்லும் என்று அறிவிக்குமா? அல்லது சின்னம் கொடுக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுப் பழைய நிலையே தொடரும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தால் நாம் தமிழர் கட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது. தீர்ப்பு எப்படி வரும் என்பது நாளை தெரிந்துவிடும்.

இந்நிலையில், பாரதியப் பிரஜா ஐக்கியதா கட்சிக்கு வழங்கிய கரும்பு விவசாயி சின்னத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தால் என்ன செய்வது என்ற எண்ணத்தில், பாரதி பிரஜா ஐக்கியதா தமிழ்நாடு பிரிவின் சார்பில் இன்று (14.03.2024) சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் பாரதியப் பிரஜா ஐயக்கியதா என்னும் பாரதிய மக்கள் ஐக்கியக் கட்சியின் அனைத்திந்திய மகளிர் அணி தலைவியும், தமிழ்நாடு பொறுப்பாளருமான திருமதி அன்னபூர்ணா பாஸ்கர், தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஜெயக்குமார் மற்றும் திராவிடத் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் முனிஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர். முதலில் பாமஐகவின் மாநிலப் பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்கள். பின்னர்ச் செய்தியாளர்களிடம் அன்னபூர்ணா மற்றும் ஜெயக்குமார் பேசியபோது, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் எங்கள் கட்சி 100க்கும் மேற்பட்ட இடங்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் எங்கள் கட்சி போட்டியிடுகின்றது” என்று தெரிவிக்கப்பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களிடம் பேசும்போது,“எல்லா கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சின்னங்கள் மாற்றிக் கொடுப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். சீமான் முதலில் இரட்டை மெழுகுவர்த்தியில் போட்டியிட்டார். அப்புறம்தான் கரும்பு விவசாயி. மதிமுக முதலில் குடை சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர்ப் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. பாமக முதலில் யானை சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டது. காங்கிரஸ் முதலில் இராட்டை சின்னம் பின்னர் இரட்டைக் காளை மாடு, தொடர்ந்து பசுவும் கன்றும் தற்போது கை சின்னத்தில் போட்டியிடுகின்றது. இந்த வரலாற்றைச் சீமான் புரிந்துகொள்ளாமல் நாங்கள் சின்னத்தைப் பறித்துவிட்டோம். எங்களுக்குத் துணையாகப் பாஜக இருக்கிறது என்று உண்மைக்குப் புறம்பாகப் பேசிவருகிறார். சீமான் எங்கள் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டால் நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக் கரும்பு விவசாயி சின்னத்தைக் கொடுக்க முன்வருவோம்” என்று கூறினர்.

சின்னம் குறித்துச் சீமான் பேசும்போது,“சின்னம் என்ன சின்னம். எண்ணம்தான் பெரிது. எங்கள் கட்சி வேறு சின்னத்தில் போட்டியிட்டால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. என்னுடைய தம்பி, தங்கைகள், உடன்பிறந்தார்கள் அனைவரும் படித்தவர்கள். எங்கள் புதிய சின்னத்தை உடனே அறிமுகம் செய்து மக்களிடம் எங்களின் எளிய பிள்ளைகள் கொண்டு சேர்ப்பார்கள். கரும்பு விவசாயி சின்னத்திற்காக நாம் போராடுகிறேன், சண்டை செய்கிறேன் என்றால் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்களின் வாக்குவங்கியைச் சிதைக்க முயற்சி நடைபெறுகின்றது. அதைத் தடுத்து நிறுத்தவே நாங்கள் உச்சநீதிமன்றம் வரை செல்கிறோம். கரும்பு விவசாயி சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்கவில்லை என்றால் புதிய சின்னத்தை உடனே மக்களிடம் கொண்டு சேர்ப்போம் இது உறுதி” என்று கூறியுள்ளார்.

கரும்பு விவசாயி சின்னத்தைப் பாஜக பிறரை வைத்துப் பறித்துவிட்டது என்ற கோபத்துடன் பாஜகவைப் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் தற்போது செயல்பட்டு வருகிறார். மேலும், பாஜகவின் சின்னமான தாமரை, தேசிய மலர். இதை எப்படித் தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு வழங்கியது. நான் மயில் கேட்டபோது தேசியப் பறவை என்று ஆணையம் மறுத்தது என்பதை விவரித்து இது குறித்தும் உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. பதில் அளிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் சின்னம் கிடைக்கின்றதோ இல்லையோ, ஊடகங்களில் தினமும் சீமான் செய்தியாகி ஊடக வெளிச்சம் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை.

– ஆதவன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.