தமிழ்நாட்டில் டெபாசிட் இழந்த கட்சிகளின் பட்டியல் !

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட நாற்பது தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தாலும், 8.10% வாக்குகள் வாங்கி மாநில கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

0

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் – 2024 கட்டுத் தொகை இழந்த கட்சிகளின் பட்டியல் !

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் நாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அன்று இரவு முழுதாக அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் இந்த மக்களவைத் தேர்தலில் டெப்பாசிட் என்னும் கட்டுத்தொகை இழந்த கட்சிகளின் விவரங்கள்:

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

டெப்பாசிட் – கட்டுத்தொகை

மக்கள் பிரதிநித்துவச் சட்டம் 1951இன்படி மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு குறிப்பிட்ட வைப்புத் தொகையை தேர்தல் ஆணையத்திற்குச் செலுத்தவேண்டும். பொது தொகுதியில் போட்டியிடுவோர் 25,000 வேட்பு மனு தாக்கலின்போது கட்டுத்தொகை செலுத்தவேண்டும். பொது தொகுதியிலும், தனித்தொகுதியிலும் போட்டியிடும் பட்டியல் இனத்தவர்கள் ரூ.12,500 செலுத்தவேண்டும். பதிவாகும் வாக்குகளில் 6% பெற்றால் வேட்பாளர்களுக்குக் கட்டுத்தொகை மீள வழங்கப்படும். வாங்கவில்லை என்றால் கட்டுத்தொகை வழங்கப்படாது. இழப்பு ஏற்படும். இந்த 6% வாக்கு என்பது தொகுதிக்குத் தொகுதி மாறுபடும்.

- Advertisement -

நாம் தமிழர் கட்சி – 40 தொகுதிகளிலும்

நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு+புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. அதில் 20 பெண்கள், 20 ஆண்கள் என்று போட்டியிட்டனர். போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்டுத்தொகையை இழந்துள்ளது. ஆனால் இந்த மக்களவைத் தேர்தலில் 8.10% வாக்குகள் வாங்கி மாநில கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். விளங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3 இடத்தைப் பெற்று கட்டுத்தொகையை இழந்துள்ளது.

எதிர்க்கட்சி அதிமுக – 8 தொகுதிகளில், தேமுதிக – 2

4 bismi svs

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக 8 தொகுதிகளில் கட்டுத்தொகையை இழந்துள்ளது. அதன் விவரம்.
1. தென்சென்னை 2. இராமநாதபுரம் 3. கன்னியாகுமரி 4. தேனி 5. தூத்துக்குடி 6. நெல்லை 7. வேலூர் 8. புதுச்சேரி மற்றும் விளங்கோடு சட்டமன்றத் தேர்தலில் கட்டுத்தொகையை இழந்துள்ளது. 2016இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக விளவங்கோடு சட்டமன்ற தேர்தலில் கட்டுத்தொகையை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தச் செய்தியாகும். விளங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கும் கீழாக 4ஆம் இடத்தைப் பெற்ற அதிமுக கட்டுத்தொகையையும் இழந்துள்ளது.

அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக – திருவள்ளூர், மத்திய சென்னை 2 தொகுதிகளில் கட்டுத்தொகையை இழந்துள்ளது.

தேசிய கட்சி பாஜக – 11, கூட்டணிக் கட்சிகள் 10

தேசிய கட்சி என்ற பெருமையோடு உள்ள பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 11 தொகுதிகளில் கட்டுத்தொகையை இழந்துள்ளது. 10 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் கட்டுத் தொகையை இழந்துள்ளன. அதன் விவரங்கள்.

பாஜக – வடசென்னை, சிதம்பரம், கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர்(பாரிவேந்தர்), திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருப்பூர், விருதுநகர்

கூட்டணி கட்சிகள்

திண்டுக்கல் – பாமக
ஈரோடு – தமாக
கள்ளக்குறிச்சி – பாமக
காஞ்சிபுரம் – பாமக
மயிலாடுதுறை – பாமக
சேலம் – பாமக
ஸ்ரீபெரும்புதூர் – பாமக
தூத்துக்குடி – தமாக
திருச்சி – அமமுக
விழுப்புரம் – பாமக

– ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.