சார் நான் பிரஸ் சார் … ஏறு ஏறு … போராட்டத்தை படம் பிடித்த பத்திரிக்கையாளர் மீது வழக்கு பதிவு !
இங்கு நடந்த சம்பவம் அனைத்தும் காவல்துறை கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருக்கும். என்னுடைய கைபேசியில் நானும் பதிவு செய்து வைத்துள்ளேன். அதை சரி பார்த்து என் மேல் தவறு இருந்தால், நடவடிக்கை எடுங்கள் என தெரிவித்தும் என் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
சாத்தூர் அருகே மர்மமான முறையில் இளைஞர் இறந்ததாக உறவினர்கள் சாலை மறியல் செய்தி சேகரித்த பத்திரிக்கையாளர் மீது வழக்கு பதிவு !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் ( 27)
இவருக்கு வேலு தாய் என்ற மனைவியும் 2 வயதில் புகழ் இசை என்ற பெண் குழந்தையும் உள்ளனர். மேலும், வேலுதாய் 5 மாதம் கர்ப்பமாகவும் இருக்கிறார். இந்நிலையில், இவரின் கணவர் செல்வகுமார் அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான தினேஷ் மேட்ச் என்ற தீப்பெட்டி தொழிற்சாலையில் கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த ஜூன் 3 தேதியன்று மாலை 5 மணி அளவில் செல்வத்துடன் பணிபுரிந்த நபர் அவரின் மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உன் கணவர் திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார். அவரை உரிமையாளர் பார்த்தசாரதி மற்றும் இருவரும் சேர்ந்து சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தகவல் தெரிவிக்கவே, பின்னர் தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது செல்வத்தை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அங்கு சென்று பார்த்தபோது கணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறையினரின் விசாரணையில் தனது கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கடந்த மே 23 ஆம் தேதி தீப்பெட்டி தொழிற்சாலையில் குச்சி மூட்டைகளை திருடியதாக ஆலையில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவானதாக உரிமையாளர் பார்த்தசாரதி என்னுடைய கணவரை தனியாக குடோனில் வைத்து வெகு நேரமாக அடித்ததாக என்னிடம் அன்று என் கணவர் தெரிவித்தார். காவல்துறையினர் ஏன் அன்றே புகார் அளிக்கவில்லை என கேள்வி எழுப்பவே
நாங்கள் மிகவும் வறுமையில் இருந்ததால் அதிகப்படியான அட்வான்ஸ் தொகை இருந்ததால் அதைக் கழித்து விட்டு வேலையை விட்டு நின்று விடலாம் என்று முடிவு செய்து இருந்தோம்.
இங்கு நடந்த சம்பவம் அனைத்தும் காவல்துறை கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருக்கும். என்னுடைய கைபேசியில் நானும் பதிவு செய்து வைத்துள்ளேன். அதை சரி பார்த்து என் மேல் தவறு இருந்தால், நடவடிக்கை எடுங்கள் என தெரிவித்தும் என் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
அதற்குள் இந்த சம்பவம் நடந்து விட்டதாக தெரிவித்து என் கணவரின் இறப்பை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என காவல்துறையினரிடம் தெரிவிக்க அவ்வாறு செய்ய இயலாது பிரேத பரிசோதனை முடிவில் உன் கணவர் தாக்குதலால் மரணம் அடைந்திருந்தால், அப்பொழுதுதான் கொலை வழக்காக மாற்ற முடியும் என காவல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதை ஏற்க மறுத்து செல்வத்தின் உறவினர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு வராததால் திடீரென சிவகாசி செல்லும் சர்வீஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை தனியார் பேருந்து மூலம் கைது செய்தபோது அருகில் இருந்த, நமது தேடல் செய்தியாளர் மாரீஸ்வரன் அவருடைய கைபேசியில் வீடியோ பதிவு செய்து வந்த நிலையில், அப்போது பணியில் இருந்த காவலர் சீனிவாசன், சட்டையை பிடித்து இழுத்த போது உதவி ஆய்வாளர் அருண்குமார் என்பவர் பேருந்தின் உள்ளே தள்ளியபோது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். எதற்காக இவ்வாறு செய்கிறீர்கள் என பத்திரிகையாளர் கேட்டதற்கு காவல்துறையினர் நீங்களும் இந்த சாலை மறியலில் ஈடுபட்டதாக தகவல் தெரிவித்து பத்திரிகையாளரை மண்டபத்தில் அடைத்தனர்.
இது தொடர்பாக பத்திரிக்கையாளர் கூறியதாவது, ”இங்கு நடந்த சம்பவம் அனைத்தும் காவல்துறை கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருக்கும். என்னுடைய கைபேசியில் நானும் பதிவு செய்து வைத்துள்ளேன். அதை சரி பார்த்து என் மேல் தவறு இருந்தால், நடவடிக்கை எடுங்கள் என தெரிவித்தும் என் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
இறந்த நபர் என்னுடைய கிராமத்தை சேர்ந்தவர் என்பதால், நான் பின்புலமாக இருந்து சாலை மறியலில் ஈடுபட தூண்டியதாக காவல்துறையினர் நினைத்து வருகின்றனர். இந்த இளைஞர் உயிர் பிரிந்ததிலிருந்து என்னுடன் அதிக நேரம் தொடர்பில் இருந்தது காவல்துறை நண்பர்களுடன் தான்.
மேலும் காவல்துறையினர் கொடுக்கும் தகவலை உறவினர்கள் ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், உள்ளூர் நபர் என்ற முறையிலும் பத்திரிக்கையாளர் என்பதாலும், காவல்துறையினர் என்னிடம் அந்த தகவலை சொல்ல நான் உயிரிழந்த நபரின் உறவினர்களிடம் சொல்லி சமாதானம் செய்து வந்தேன்.
மேலும், உயிரிழந்த செல்வத்தின் நண்பர்கள் ஒரு சில நபர்கள் உணர்ச்சிவசப்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டதற்காக நான் எவ்வாறு பொறுப்பாக முடியும்? காவல்துறை அதிகாரிகளே இவ்வாறு செய்ததால் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக பாதிக்கப்பட்ட செய்தியாளர் மாரீஸ்வரன் தெரிவித்தார்.
– அங்குசம் செய்திப்பிரிவு.