இவர்கள் ஒருபோதும் வாஜ்பாய் ஆகிவிட முடியாது என்கிறபோது ஜவஹர்லால் நேரு ஆக முடியுமா ?

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தான தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், ஐபெட்டோ அகில இந்திய செயலர் அண்ணாமலை.

1

இவர்கள் ஒருபோதும் வாஜ்பாய் ஆகிவிட முடியாது என்கிறபோது ஜவஹர்லால் நேரு ஆக முடியுமா ?

டைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தான தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், ஐபெட்டோ அகில இந்திய செயலர் அண்ணாமலை.

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

அவர் விடுத்துள்ள அறிக்கையில், “18 – வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் 2024 சூன் 4ந்தேதி வெளிவரத் தொடங்கியது! கருத்துக் கணிப்புகளை சுக்கு நூறாக நொறுங்கச் செய்து மக்கள் அளித்த வாக்குப் பதிவுகளின் எண்ணிக்கை அடிப்படையில் வெளிவந்துள்ளன. வரவேற்கிறோம்..! வாழ்த்துகிறோம்..!! படிப்பினைப் பெறுவோம்..!!!

ஒரே நாடு-ஒரே தேர்தல்! பொது வாக்காளர் கணக்கெடுப்பு! ஒரே ஆட்சி-ஒரே கட்சி, ஒரே பிரதமர் என்ற கொள்கை முழக்கத்திற்கு எதிர்ப்புணர்வு ஓங்கி ஒலித்திட எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கையினை வலுப்படுத்தியுள்ள இந்திய நாட்டு வாக்காளர்களுக்கு கரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்வோம்..!

- Advertisement -

பாஜக கூட்டணி 370 முதல் 400 எண்ணிக்கை வரும். பெறுவார்கள் என்றது கருத்துக்கணிப்புகள், தலைவர்கள் உறுதிப்படுத்தினார்கள். ஆனால் பா.ஜ.க 240 இடங்களைப் பெற்றுள்ளது. NDA கூட்டணி 291 இடங்களைப் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 2019ல் பெற்ற 52 இடங்களே கிடைக்காது என்றார்கள்.

INDIA கூட்டணிக்கு 120 முதல் 170 இடங்கள் கிடைக்கும் என்றார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி 99 இடங்களைப் பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 234 இடங்களைப் பெற்றுள்ளது.

இந்திய நாட்டில் வாழும் சிறுபான்மையினர் அனைவரும் Nationality-Indian என்று தான் பதிவு செய்துள்ளார்கள். ஆனால் இந்திய நாட்டை ஆளுகிற பிரதமர் அவர்களே அவர்கள் மீது மதவெறுப்புத் தீயினை அள்ளி வீசினால் அறச்சீற்றத்திற்கு ஆளாகியுள்ளார்.

அயோத்தியே அவரை கைவிட்டுவிட்டதே!

தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு- தி.மு.க.வே இருக்காது என்று பிரதமர் சாபமிட்டு வந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே என பறைசாற்றி வந்தார். நாற்பதிலும் கொண்டாடி மகிழும் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறச் செய்துள்ளனர்.

நாட்டை இந்தியா கூட்டணியுடன் இணைந்து நாற்பதும் வழிநடத்தும் என தி.மு.க கூட்டணித் தலைவராக தலைவர் என்ற முறையில் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

சூன் 5, டில்லி சென்று வழிநடத்துகிறார். மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், புதுச்சேரி உள்பட 39 தொகுதிகளையும் வென்று காட்டினார்.

ஐபெக்டோ அண்ணாமலை
ஐபெக்டோ அண்ணாமலை

கூட்டணி கட்சிகளின் உணர்வுகளை மதித்து வழி நடத்துகிறார். அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும், சமூக நீதியினை, நாட்டின் பன்முகத் தன்மையினை போற்றி பாதுகாத்திட கொள்கை வழி ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

4 bismi svs

மக்களுக்கு செய்துவரும் நலத்திட்ட உதவிகள் வெற்றிக்கு கைகொடுத்து உதவுகின்றன. அதேநேரத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கரவிலாது களத்தில் நின்று பணியாற்றி வருகிறார்கள்.

மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் அன்றாடம் கொண்டு சேர்த்து வருகிற அரசு ஊழியர்கள்-மக்களிடம் அன்றாடம் தொடர்புடைய ஆசிரியர்கள்- ஓய்வூதியதாரர்கள் அனைவரின் வாக்கு வங்கியும் சேர்த்துதான் இந்த மாபெரும் வெற்றியினைப் பெற்றுத் தந்து வருகிறார்கள் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதயத்தில் பதிவு செய்துள்ளார்கள் என்றே நம்பிக்கை கொண்டு வருகிறோம்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அல்ல 2024ல் முதலமைச்சர் அவர்கள் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தருவார்கள் என்ற நம்பிக்கையில் இன்னமும் உறுதி வைத்துள்ளார்கள்.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா-லேடியா- என்று சவால் விட்டு ஆட்சியினை நடத்தியவர். ஜேக்டோ-ஜியோ போராட்டத்தில் 1.75 லட்சம் பேரை ஒரே கையெழுத்தில் பணிநீக்கம் செய்தவர். நள்ளிரவில் கைது செய்து எங்களைப் போன்ற தலைவர்களை புழல்சிறையில் அடைத்தவர். நிரந்தரப் பணிநீக்கம் செய்தவர்.

வலிமையான வாக்கு வங்கியினை பெற்றிருந்த மறைந்த முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே 40ம் அவர்களுக்கு எதிராக அமையவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெற்றியினை பெற்றுத் தந்தோம் என்ற வரலாற்றினை மறந்துவிட முடியாது?

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி அவர்கள் மத்தியில் ஆட்சியினை அமைக்கிறார். கூட்டணி கட்சிகளின் பலத்துடன் தவிர்க்க முடியாததாகும்!

மூன்றாவது முறையாக பண்டிதர் ஜவகர்லால் நேரு அவர்கள் ஆட்சியினை அமைத்தபோதும் அவர்களது வாக்குவங்கி சரிந்திருந்தது என்று ஒப்பீடு சொல்கிறார்கள்.

இவர்கள் ஒருபோதும் வாஜ்பாய் ஆகிவிட முடியாது. என்கிறபோது-ஜவஹர்லால் நேரு ஆக முடியுமா?

இதுவரையில் பதவி வகித்த பிரதமர்களின் வரிசையில் கட்சியின் பேச்சாளர்களை விட தரம் தாழ்ந்த மேடைப் பேச்சினைக் கேட்டு பொது நோக்கர்கள் அனைவரும் கவலை தெரிவித்தார்கள்.

இந்திய தேசிய கல்விக் கொள்கை!2020க்கு எதிராக ! குடும்பத் தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிராக கல்வியினை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரும் கொள்கை முடிவில் உறுதியாக இருந்து குரல் கொடுத்திட வேண்டுகிறோம்.

விவசாயிகள் விரோத-ஆசிரியர்கள், அரசு ஊழிகர்கள், தொழிலாளர் விரோத கொள்கை உடைய அரசுக்கு எதிராக குரல் ஒங்கி ஒலிக்கட்டும். நீட் விலக்குக் கொள்கையின் உறுதி தொடரட்டும்.

சூன் 9ந்தேதி-ஜம்மு காஷ்மீர்-ஸ்ரீநகரில் AIFETO அகில இந்திய அமைப்பு கூடுகிறோம். 22 மாநிலங்கள் கலந்து கொள்கின்றன. எதிர்ப்பு கொள்கை உணர்வில் கரம் கோர்த்து என்றும் உறுதியாக நிற்போம். வெற்றி பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

என்றும் சமூக நீதியினை பாதுகாக்கும் கொள்கை உணர்வில் இரண்டறக் கலந்து நிற்கும், மூத்தப் பொறுப்பாளர்.” என்பதாக தெரிவித்திருக்கிறார்.

  • அங்குசம் செய்திப் பிரிவு.
5 national kavi
1 Comment
  1. ராமலிங்கம் says

    ஜவகர்லால் நேரு, மவுண்ட் பேட்டன் மனைவியுடன் சல்லாபித்தது போல் மோடி எந்த தவறும் செய்யவில்லை.

Leave A Reply

Your email address will not be published.