இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட ‘ பயமறியா பிரம்மை ‘ ஃபர்ஸ்ட் லுக் !

படத்தின் கதை 90 மற்றும் 2000ஆம் ஆண்டில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து கதாபாத்திரங்க்கும் முன்னுரிமை கொடுத்து படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது

0

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட ‘ பயமறியா பிரம்மை ‘ ஃபர்ஸ்ட் லுக் !

புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநரும், தயாரிப்பாளரும், தமிழ்த் திரையுலகின் படைப்புலக ஆளுமையுமான பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நந்தா- வி. பிரவீண் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார்.‌ சதீஷ் கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை அகில் பிரகாஷ் மேற்கொண்டிருக்கிறார். ஒலி வடிவமைப்பை விஜய் ரத்னமும், ஒலிக் கலவையை ரஹ்மத்துல்லாவும் கையாண்டிருக்கிறார்கள். க்ரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை 69 எம் எம் ஃபிலிம் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் மற்றும் ராகுல் கபாலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

4 bismi svs

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” படத்தின் கதை 90 மற்றும் 2000ஆம் ஆண்டில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து கதாபாத்திரங்க்கும் முன்னுரிமை கொடுத்து படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது” என்கிறார்.

- Advertisement -

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படம் இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற ஆறுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகனை வென்றிருக்கிறது என்பதும், இந்த ஆண்டு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, பலரின் பாராட்டுகளை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.