தமிழகத்தில் “ ரோட் ஷோ ” காட்டிய மோடியும் மோ (ச) டி வாக்குறுதிகளும் !

கடந்த 2014 , 2019 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் நரேந்திர மோடி தமிழகம் வந்திருக்கிறார். அப்போது அவர் அள்ளிவிட்டு சென்ற வாக்குறுதிகளை வாசகர்களாகிய வாக்காளர்களுக்கு நினைவுபடுத்தும் நோக்கில் அவற்றுள் சிலவற்றை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழகத்தில் “ரோட் ஷோ” காட்டிய மோடியும் மோ (ச) டி வாக்குறுதிகளும் !

நாடாளுமன்றத் தேர்தலுக்கான சூறாவளிப் பிரச்சாரங்கள் இறுதிகட்டத்தை எட்டிவிட்டன. இதுநாள்வரை செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முகம் கொடுக்காதது மட்டுமல்ல; பொதுவில் நாட்டின் பிரதமராக ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டிகளின் எண்ணிக்கையை பத்து விரல்களுக்குள் அடக்கிவிடலாம்.

தீபாவளி வாழ்த்துகள்

அதுவும் தேர்தல் நெருங்கும் சமயங்களில், அவர்களுக்கு பிடித்தமான தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டிகளாகவே அமைந்திருக்கின்றன என்பதையும்;  இட்லி, பிடிக்குமா? உப்புமா பிடிக்குமா? என்பதுபோன்ற அரசியல் ஆழமிக்க கேள்விகள் அடங்கிய பேட்டிகள் அவை என்பதையும் நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

முன் எப்போதும் இல்லாத வகையில், ”ரோட் ஷோ” என்ற பெயரில் தமிழகத்தின் வீதிகளையும் வலம் வந்து சென்றிருக்கிறார் பிரதமர் மோடி. இதற்கு முன்னர் கடந்த 2014 , 2019 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் நரேந்திர மோடி தமிழகம் வந்திருக்கிறார். அப்போது அவர் அள்ளிவிட்டு சென்ற வாக்குறுதிகளை வாசகர்களாகிய வாக்காளர்களுக்கு நினைவுபடுத்தும் நோக்கில் அவற்றுள் சிலவற்றை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

”பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை எல்லாம் மீட்டு, ஒவ்வோர் இந்தியக் குடும்பத்தின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவோம்” என்பது கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் மோடி சொன்ன முத்திரை வாக்குறுதிகளுள் முதன்மையானது.

”நாட்டை மீட்பதற்காகக் கடவுள் என்னைத் தேர்வு செய்துள்ளார். நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கே வரவில்லை. உங்கள் சேவகனான எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். 60 மாதங்களில் இந்தியாவை மாற்றிக் காண்பிக்கிறேன். 60 ஆண்டுகளில் அவர்கள் செய்யாததைச் செய்வேன் என வாக்குறுதி அளிக்கிறேன்” என்று தமிழ்நாட்டில் பிரசார மேடைதோறும் அப்போது முழங்கினார்.

♦ ”சீனாவிலிருந்து பட்டாசுகள் வருவதால் சிவகாசியில் பட்டாசுத் தொழில் நலிவடைந்திருக்கிறது. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் பட்டாசுத் தொழிற்சாலைகளையும், தொழிலாளர்களையும் பாதுகாப்போம்”  (2014 ஏப்ரல் 17. ராமநாதபுரம்.)

♦ மிகப்பெரிய புண்ணிய ஸ்தலமான `ராமேஸ்வரம் சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டு, உலகத்தினர் அனைவரும் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்”  (2014 ஏப்ரல் 17. ராமநாதபுரம்.)

♦ ”பி.ஜே.பி. கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 70 கோடிப் பேருக்கு வேலை கொடுப்போம்”  (2014 ஏப்ரல் 16. கிருஷ்ணகிரி, கந்திக்குப்பம்.)

♦ “ஜவுளிகளின் சொர்க்கமான ஈரோட்டில் ஜவுளித் தொழிலுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். ஈரோட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உறுதியான நடவடிக்கை எடுப்போம்” (2014 ஏப்ரல் 17. ஈரோடு.)

♦ ”பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் கங்கை – காவிரி நதிநீர் இணைப்புத் தி்ட்டம் செயல்படுத்தப்பட்டு, தமிழக விவசாயிகளின் பாசன நீர்ப் பிரச்னையைத் தீர்ப்போம்”  (2014 ஏப்ரல் 17. தமிழ்நாடு, ராமநாதபுரம்)

♦ ”மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் நதிகள் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்” (2014 ஏப்ரல் 16. சேலம்.)

♦ ”மீன்கள் அதிகம் இருக்கும் இடத்தை சேட்டிலைட் மூலம் கண்டறிந்து அது தொடர்பான தகவல் மீனவர்களின் செல்போன்களுக்குத் தெரிவிக்கப்படும். இதனால் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று மீன்களை அதிக அளவில் பிடிக்கலாம். குஜராத்தில் உள்ள இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும். விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் மீனவர்களைப் பாதுகாப்போம்”  (2014 ஏப்ரல் 17. தமிழ்நாடு, ராமநாதபுரம்)

♦ ”ஈரோட்டு மஞ்சளை இந்தியாவே நேசிக்கிறது. ஈரோடு விவசாயிகளுக்கு இந்தியா நன்றிக் கடன்பட்டுள்ளது. பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததும் மஞ்சளை ஆயுர்வேதம் மட்டுமன்றி, அழகுசாதனப் பொருளாகவும் மாற்ற நடவடிக்கை எடுப்போம்” (2014 ஏப்ரல் 17. ஈரோடு)

2014 – இல் தமிழகம் வந்தபோது கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று என்று பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் 2024 இல் தமிழகம் வந்த மோடி வாயைத் திறக்காதது, வியப்பில்லை. வாக்காளர்களாகிய நாம்தான் இம்மோசடி வாக்குறுதிகள் குறித்து கவலை கொண்டாக வேண்டும்.

இது தவிர, பொதுவில் பாஜக சார்பில் தமிழகத்திற்காக தனிச்சிறப்பாக அள்ளித் தெளித்த வாக்குறுதிகள் ஏராளம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

♦ கோயில்கள் அரசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு தனியாரிடம் அளிக்கப்படும் என்பதை நீண்ட காலமாகவே பா.ஜ.க கூறிவருகிறது. மாவட்டந்தோறும் கலாக்ஷேத்ரா நிறுவப்படும் என்றார்கள்.

♦ மதுரையில் எய்ம்ஸ் ஓராண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் என 100 கோடி செலவில் அடிக்கல் நாட்டினார்கள்.

♦ விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல மீனவர்களுக்கும் 6000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என்றார்கள்.

இதையும் படிங்க:

தேர்தல் தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு !

♦ வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தையின் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் வைப்பு நிதி ஏற்படுத்தப்படும் என்றார்கள்.

♦ தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு செல்ல வசதியில்லாத ஏழை மற்றும் நடுத்தரப் பெண்களுக்கு உதவும் விதமாக மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் துவங்கப்படும் என்றார்கள்.

♦ மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றதோடு, வேலை இழக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அரசின் வேறு பிற துறைகளில் பணியமர்த்தப்படுவர் என்றார்கள்.

♦ 50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்கள்.

♦ சென்னை உயர் நீதிமன்றக் கிளை கோயம்புத்தூரில் அமைக்கப்படும் என்றும் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப புதிய காவல் நிலையங்கள் துவக்கப்படும் என்றார்கள்.

♦ பசுவதை தடைச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படும் என்றதோடு, இறைச்சிக்காக கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு பசுக்கள் கடத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்படும் என்றும் மீட்கப்படும் பசுக்களை தமிழக கோவில்களில் கோசாலைகள் அமைத்து பராமரிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்கள்.

♦ தமிழகத்தில் அகதிகள் முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்க பரிந்துரை செய்யப்படும் என்றார்கள்.

♦ அனைத்து குடும்பங்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கிடைக்கவும், அனைத்து ஏழை, கிராமப்புற குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு கிடைக்கவும் உறுதி செய்யப்படும் என்றார்கள்.

♦ அனைத்து குடிமகனுக்கும் வங்கிக் கணக்கு இருப்பது, அனைத்து வீடுகளிலும் கழிவறை இருப்பது, அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றார்கள்.

அவர்கள் சொன்னதை பட்டியலிட்டிருக்கிறோம். சொன்னதை செய்தார்களா? என்பதை பகுத்துப் பார்த்து, பகுமானமாக வாக்களிப்பது வாக்காளர்களின் விருப்பம் சார்ந்தது. விடுபடாமல் அனைவரும் வாக்களிப்போம்!

மணிகண்டன்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.