அங்குசம் சேனலில் இணைய

கொண்டலாத்தி கவிதைகள் யாரிடமாவது உள்ளதா ? – பறவைகள் தொடர் 19

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கொண்டலாத்தியின் அழகு அதன் விசிறி போன்ற கொண்டைதான். தலையின் மேலுள்ள சிறகுகளை அவ்வப்போது சிலுப்பி, விறைப்பாக நிற்பதால் அவை கொண்டை போன்ற தோற்றத்தை அளிக்கும். எனினும் எல்லா நேரத்திலும் அவை விரிந்து காணப்படுவதில்லை. அப்படி கொண்டையோடு காணும் போதெல்லாம் செவ்விந்தியனின் தலையலங்காரம்தான் எனக்கு நினைவுக்கு வரும். அதன் கொண்டை ஒரு அழகென்றால் அது பறந்து செல்லும் விதமோ அழகோ அழகு. அலைபோல மேலெழும்பி கீழே தாழ்ந்து பறந்து செல்லும். அப்போது இறக்கைகளை அடித்துக் கொண்டும் பிறகு உடலோடு சேர்த்து வைத்தும் பறந்து செல்லும். அப்போது அதன் இறக்கைகளிலும் வால் சிறகுகளிலும் உள்ள கருப்பு வெள்ளை வரிகள் அழகாகத் தோற்றமளிக்கும்.

கொண்டலாத்தி கொண்டலாத்தியின் குரல் எனக்குப் பரிச்சயமானதுதான். இவை உரக்கக் குரலெழுப்புவதில்லை. எனினும் தூரத்திலிருந்து குரலெழுப்பினாலும் அடையாளம் காணுமளவிற்கு  தெளிவாகக் கேட்கும். இதன் குரலை வைத்தே இதற்குப் பெயரிட்டார்கள். இதன் ஆங்கிலப்பெயர் Hoopoe (Upupa epops). இப்பறவை குரலெழுப்புவது ஊப்..ஊப்..ஊப்.. என்றிருக்கும். இதனாலேயே Hoopoe எனப் பெயர் பெற்றது. குக்..குக்..குக்.. எனக் குரலெழுப்புவதால் குக்குருவான் (Barbet) எனப் பெயர் பெற்றதைப் போல. இவ்வாறு உச்சரிப்பதை வைத்தே பெயரிடுவதை ஆங்கிலத்தில் Onomatopoetic என்பர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கொண்டலாத்தி கொண்டலாத்தி ஆதி காலத்திலிருந்தே மனிதனை தன் அழகால் கவர்ந்திழுத்திருக்கிறது. உலகப் புராணங்கள் பலவற்றிலும், திருக்குர்ஆனிலும் கூட இப்பறவையினைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றது. கொண்டலாத்தி இஸ்ரேல் நாட்டின் தேசியப் பறவை. நம் பஞ்சாப் மாநிலப் பறவையும் கூட இதுதான். பறவைகளைப் பற்றிய அருமையான தமிழ் புதுக்கவிதைகளைக் கொண்ட தொகுப்பு ஒன்று இருக்கிறது தெரியுமா? அந்த கவிதை நூலின் பெயரும் “கொண்டலாத்தி”!

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தமிழில் இதற்கு பல பெயர்கள் உண்டு. பல பகுதிகளில் வாழும் மக்கள் பல பெயர்களை ஒரே பறவையை குறிப்பிட பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் இதற்கும், கொண்டலாத்தி… சாவல்குருவி… புளுக்கொத்தி… எழுத்தாணிக் குருவி… கொண்டைவளர்த்தி… கொண்டை உலர்த்தி… விசிறிக்கொண்டைக்குருவி… இதில்லாமல் எங்கள் ஊரில் ஒரு வயதான ஆயா இதை சுடுகாடுதூத்தி (தூற்றி) என்றுதான் சொல்லும். அதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. வேறு பெயர்கள் இருக்கிறதா? எனச் சொல்லுங்கள் !

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

(தொடரும்)

—   ஆற்றல் பிரவீன்குமார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.