மதுரையில் மர்மமான முறையில் பாஜக நிர்வாகி மரணம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரையில் பாஜக நிர்வாகி  மர்மமான முறையில் உயிரிழப்பு  காரில் இருந்து உடல் சடலமாக மீட்பு  காவல்துறை தீவிர விசாரணை உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை முடியும் வரை உடலை பெறமாட்டோம் என பாஜகவினர் கோரிக்கை….

மதுரை மாநகர் எஸ்.ஆலங்குளம் டிசைன் நகர் 3வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி் இவர் மனைவி ஜெயலட்சுமி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இனிய ரமலான் வாழ்த்துகள்

கருப்பசாமி்
கருப்பசாமி்

மதுரை பாஜக ஓபிசி அணியினுடைய செல்லூர் மண்டல செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். மேலும் கருப்பசாமி கார் ஓட்டும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியேறிய கருப்பசாமி நேற்று வரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இன்று காலை மதுரை கூடல் புதூர் பகுதியில் காரில் சடலமாக மீட்கப்பட்டார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

திருச்சியில் அறிவுசார் நூலகம்

இன்று காலையில் கூடல்புதூர் சர்ஜ் அருகே மூக்கில் நுரைவந்த நிலையில் கருப்பசாமியின் சடலம் காரில் இருந்து மீட்கப்பட்டதால் இது தற்கொலையா? வேறு ஏதேனும் காரணமா என்ற அடிப்படையில் கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக நிர்வாகி கருப்பசாமியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உரிய விசாரணை நடத்துமாறு உடலை பெற மாட்டோம் என பாஜக நிர்வாகிகள் குடும்பத்தினரும் பாஜகவினரும் தெரிவித்துள்ளனர்.

திங்கள்கிழமை இரவு வீட்டிலிருந்து சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே சிசிடிவி கேமிராக்களை ஆய்வுசெய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.