பொன்முடி விவகாரம் – மாநில சுயாட்சி – நெல்லை சம்பவம் : பதிலளித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருநெல்வேலி செல்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைத்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

அமைச்சர் பொன்முடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை கட்டுப்படுவது குறித்த கேள்விக்கு , “ஜனநாயக நாட்டில் போராட்டத்தை யாரும் தடுக்க முடியாது. பேச்சு சுதந்திரம் மிகப்பெரியது. இதை அடக்குமுறை  செய்வது கண்டிக்கத்தக்கது  என்றார்.

Sri Kumaran Mini HAll Trichy

ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டதாக சொல்லப்படுவது குறித்து கேள்விக்கு .. “ஆளுநரை சந்திப்பது குறித்தது புரளிதான். ”

மாநில சுயாட்சி குறித்த கேள்விக்கு .. “1969 இல் கலைஞர் ஒரு அறிக்கை கொடுத்தார். அதன் அடிப்படையில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எழுதிய கடிதத்தில் பதில் கூறவில்லை. இருந்தாலும் கூட இன்று அதையெல்லாம் சுட்டிக்காட்டி பெரிதாக்க அவசியம் இல்லை. நீட் தேர்வு முடிந்து போனது. நீட் மற்றும் ஜிஎஸ்டி காங்கிரஸ் காலத்தில் யோசிக்கப்பட்டது. பிஜேபி காலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது சுயாட்சி என்பது அவர்களின் பிரச்சனையை மறைப்பதற்காக எடுக்கிறார்கள். ”

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தமிழகத்தில் பேருந்துகள் பழுதாக இருப்பது குறித்த கேள்விக்கு ..

செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்
செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்

“எல்லா பேருந்தும் லாபத்தில் ஓடுகிறதா? என்பது சந்தேகம் நஷ்டத்தில் ஓடும் அதற்கு மாநில அரசு அதற்கு தகுந்தார் போல மானியம் கொடுத்து போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும்.”

கல்லூரி விழாவில் மாணவர்களிடம் ஆளுநர் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறியது குறித்த கேள்விக்கு ..

Flats in Trichy for Sale

“ஆளுநர் என்ன பேசினார் என்பது தெரியவில்லை. அதை பார்த்து விட்டு பதில் சொல்கிறேன்”

தமிழ்நாட்டில் எது ஒழுங்காக நடைபெறுகிறது. கிராமத்தில் இளைஞர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள். அந்த புழக்கங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளது. அதை கட்டுப்படுத்த வேண்டும்..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதிமுக பாஜக கூட்டணி குறித்து அதிமுக தொண்டர்கள் கூறுவது குறித்த கேள்விக்கு ..

“பொள்ளாச்சி ஜெயராமனிடம் இன்று பேசினேன். அவர் எனக்கும் சீனியர் அதிமுக கிளைச்செயலாளர் வரை எனக்கு தெரியும். நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. ”

நெல்லையில் பள்ளி மாணவன் தாக்குதல் குறித்த கேள்விக்கு ..

”நெல்லையில் பள்ளி மாணவன் தாக்கிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறை எந்த இடங்களில் பிரச்சனை வரும் என்பதை  கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்பதாக பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

 

—   ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.