SIR திட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்திய பாஜக!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் SIR (Social Impact Registration) தொடர்பான BLA–2 ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டம் சாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சட்டமன்ற பொறுப்பாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
இதில் சாத்தூர் நகர தலைவர் பொன்ராஜ், நகர கவுன்சிலர் மற்றும் மாவட்ட பொருளாளர் மாரிக்கண்ணு, மாவட்ட துணைத் தலைவர் முனீஸ்வரன், ராஜபாளையம் கிழக்கு மண்டல தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், SIR திட்டத்தின் நோக்கம், அதன் வழிமுறைகள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் பணிகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கம், மற்றும் சமூக நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு சட்டமன்ற பொறுப்பாளர் சுரேஷ்குமார் நன்றி தெரிவித்தார்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.