பக்கா பிளான் பாஜக !

மார்ச்-01 அன்று மதுரையில் பிரதமர் மோடியின் பங்கேற்புடன் நடைபெற்ற தே.ஜ. கூட்டணி பொதுக்கூட்டத்தை பக்காவாக பிளானோடு நடத்தி முடித்திருக்கிறது, பாஜக. திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜக கையில் எடுத்திருக்கும் நிலையில், பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் சென்று தரிசனம் செய்வதும் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்தது. எடப்பாடி தொடங்கி, டிடிவி தினகரன், ஏ.சி. சண்முகம், அன்புமணி, ஜி.கே.வாசன் வரையில் கூட்டணி கட்சியினர் எல்லோரும் மேடையேற்றப்பட்டிருந்தார்கள்.

வழக்கமான புரோட்டாகால்களையும் மீறி, கடைசி நேரத்தில் அழைக்கப்பட்டிருக்கிறார் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கத்தின்ஆர்.வி. என்றழைக்கப்படும் ஆர்.விஸ்வநாதன். பல்வேறு சமுதாயங்களை சேர்ந்தவர்கள் மேடையில் இருந்தபோதும், தமிழகத்தின் மிகப்பெரிய சமுதாயம் முத்தரையர் சமுதாயம் அந்த சமுதாயத்தின் தலைவராக ஆர்.வி கலந்து கொண்டிருக்கிறார் என்று பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசியதில் புல்லரித்து போய்விட்டார்களாம் ஆர்.வி.யின் ஆதரவாளர்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.