தமிழக மக்களிடம் மன்னிப்பு கேள் ! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கருப்பு கொடி !
தமிழக மக்களிடம் மன்னிப்பு கேள்! ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கருப்பு கொடி!
சென்னை, நெல்லை வரலாறு காணாத மழை வெள்ளம் பேரிடர். ஒன்றிய அரசே தமிழகத்திற்குரிய பேரிடர் நிதியை உடனே வழங்கு! ஆதிக்க திமிராக பதில் சொல்லும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே தமிழக மக்களிடம் மன்னிப்பு கேள் “ என்ற கோரிக்கைகளுடன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலைக்கு முன்பாக டிச-25 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநகர செயலாளர் தோழர் கார்க்கி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ம.க. இ.க மாநில செயலரும் பாடகரும் ஆன தோழர் கோவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசில் அங்கம் வகிக்கும் மாநில அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பிச்சை கேட்பது போல் கேலிச்சித்திரம் தீட்டிய தினமலர் நாளிதழின் வன்மத்தை சுட்டிக் காட்டி பேசினார். பொதுவில் ஆணவத்தோடும் அகங்காரத்தோடும் கருத்து தெரிவித்து வரும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வரம்பு மீறிய பேச்சுக்கும் கண்டணம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெல்லைக்கு வருகை தரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடிகளுடன் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அங்குசம் செய்தி பிரிவு.