38 வயதில் மூளைச் சாவு : உறுப்பு தானம் செய்ய முன்வந்த குடும்பத்தினரை கௌரவித்த மக்கள் சக்தி இயக்கத்தினர் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

உடல் உறுப்புதானத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை கொடையாக அளிக்கும் குடும்பத்தினரை, திருச்சியை சேர்ந்த மக்கள் சக்தி இயக்கத்தினர் தொடர்ந்து கௌரவித்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக, 55-வது நிகழ்வாக, புதுக்கோட்டையை சேர்ந்த வர்ணம் பூசும் தொழிலாளியின் குடும்பத்திற்கு பாராட்டு சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள்.

க.பாண்டியன்
க.பாண்டியன்

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

புதுக்கோட்டை காந்திநகரைச் சோ்ந்த 38 வயதான  க.பாண்டியன், பெயிண்டிங் தொழிலாளி. வழக்கமாக, பணிக்கு செல்லும் இவா் அன்றைய தினம் அறந்தாங்கி பகுதிக்கு வேலைக்குச் சென்றார். அங்கு அவர் கீழே விழுந்து காயமடைந்தார். அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரை, மேல் சிக்கைக்காக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக்க மருத்துவர்கள் அறிவித்தனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மக்கள் சக்தி இயக்கம்மேலும், அவரது உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவது  குறித்து அவரது மனைவி  பா. அபிராமி உள்ளிட்ட உறவினா்களுக்கு மருத்துவா்கள் விளக்கிக் கூறினா். அவரது மனைவி தனது கணவரின் உடல் உறுப்புகளை கொடையாக வழங்க ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து, அறுவைச் சிகிச்சை மூலம் பாண்டியனின் கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் உள்ளிட்ட  உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. மாற்று அறுவைச் சிகிச்சை சட்டப்படி, முன்பதிவு செய்து வைத்துள்ளோருக்கான முன்னுரிமை அடிப்படையில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தனது கணவரை இழந்த நிலையிலும், அவரது உடல் உறுப்புகளை உறுப்புதானம் செய்ய முன்வந்த பாண்டியன் குடும்பத்தினரை மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.

மக்கள் சக்தி இயக்கம்மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் க.சி.நீலமேகம், துணைத் தலைவர் வெ. இரா. சந்திரசேகர்,துணைச் செயலர் இரா. இளங்கோ, தண்ணீர் அமைப்பு இணைச் செயலர் ஆர்.கே. ராஜா, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார்  ஆகியோர் , மூளைச்சாவடைந்த பாண்டியனின் மனைவி அபிராமி பாண்டியன், மகள்கள் பா.சாய் ஸ்ரீஜா, பா.நித்யலெட்சுமி மற்றும் அவரது தாயார் க.பழனியம்மாள் ஆகியோரின் ஈகைச் செயலைப் பாராட்டி நிதியாக ரூ10000,/ டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி புத்தகம், திருக்குறள் புத்தகம், கதர் ஆடை அணிவித்து, சான்றிதழ் வழங்கி நன்றி தெரிவித்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.