கட்டிப்பிடித்த மணமகனிடம் கட்டணம் வசூல் செய்த மணப்பெண் !
நான் இதற்கு முன் உங்களிடம் கூறி இருக்கிறேன். சீனா என்றாலே வினோதம், வினோதம் என்றாலே சீனா அதற்குத் தகுந்தார் போல் தான் தற்போது நாம் எழுதும் செய்திகள் அனைத்துமே சீனாவை சார்ந்தே வந்து கொண்டிருக்கிறது. ஆம் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையிடம் இருந்து ‘கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்’ கேட்ட சம்பவம் தான் அது!
சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண், திருமணம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு மாப்பிள்ளைக்கு வருமானம் மிகவும் குறைவு, அவர் மிகவும் நேர்மையானவர் என்பதால் அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய விரும்பவில்லை’ என்று கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். குறிப்பாக தனது திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து 200,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 23 லட்சம்) வரதட்சணை பெற்றிருக்கிறாராம். இந்த நிலையில் தான் விரக்தி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர்.
அதற்கு அந்தப் பெண் அளித்த பதில் தான் அங்கு ஹைலைட் தான் வரதட்சணையாக வாங்கிய 200,000 யுவானில் இருந்து 30,000 யுவான் (சுமார் ரூ. 3.5 லட்சம்) மாப்பிள்ளை தன்னை ‘கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்’ மற்றும் இதர செலவுகளுக்காக அந்தத் தொகையை பிடித்துக் கொண்டு மீதமுள்ள யுவானைத் தான் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளார். அதாவது திருமணத்திற்கு இவர்களுக்கு போட்டோஷூட் எல்லாம் நடந்ததாம், அப்போதுதான் புகைப்படக்காரர் கட்டிப்பிடித்து போஸ் கொடுக்கச் சொல்லி இருக்கிறார் அதை தான் இந்த மேடம் நினைவு வைத்து கட்டணம் வசூலித்து இருக்கிறது. இறுதியில் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அந்த பெண் 170,500 யுவானை (சுமார் ரூ. 20 லட்சம்) மாப்பிள்ளை வீட்டாரிடம் திருப்பித் தர ஒப்புக்கொண்டிருக்கிறார்.
பொதுவா மாப்பிள்ளை சரி இல்லனா தான் கல்யாணத்தை நிறுத்துவாங்க ஆனா இந்த சீனாவுல மாப்பிள்ளை சரியா இருக்கறதுனால கல்யாணத்தை நிறுத்திய சம்பவம் தான் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாகி வருகிறது. எனக்கு மாப்பிள்ளை மைண்ட் வாய்ஸ் நினைச்சா தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு “நான் பாட்டுக்கு சிவனேனு தாண்டா இருந்தேன் வேற யாராவது வம்பு தும்புக்காது போனானா”
— மு. குபேரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.