அங்குசம் பார்வையில் ‘பிரதர்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் ‘பிரதர்’

  தயாரிப்பு : ’ஸ்கிரீன் சீன் மீடியா’ சுந்தர் ஆறுமுகம். டைரக்‌ஷன் : ராஜேஷ் எம். நடிகர்-நடிகைகள் ; ‘ஜெயம்’ ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, நட்டி, ராவ் ரமேஷ், சரண்யா பொன்வண்ணன், விடிவி. கணேஷ், அச்யுத்குமார், சீதா. ஒளிப்பதிவு : விவேகானந்த் சந்தோஷம், இசை : ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டிங் : ஆஷிஷ் ஜோசப், ஆர்ட் டைரக்டர் : கிஷோர், ஸ்டண்ட் டைரக்டர் : ‘ஸ்டன்னர் சாம், நடனம் : சதிஷ் கிருஷ்ணன், சாண்டி. பி.ஆர். ஓ.: நிகில் முருகன்.

அங்குசம் இதழ்..

சென்னையில் சட்டக் கல்லூரியில் இறுதித் தேர்வை எழுதும் போது, சட்ட அமைச்சரின் மகனுக்காக பரிட்சை எழுதும் பேராசிரியரை வீடியோ எடுத்து அம்பலபடுத்துகிறார் ஜெயம் ரவி. இதனால் இவரின் வக்கீல் கனவு பாதியிலேயே பணாலாகிறது. அப்பா அச்யுத்குமார்—அம்மா சீதாவுடன் தான் வசிக்கும் அப்பார்ட்மெண்ட் கட்டி 30 வருடங்களுக்கும் மேலாகிவிட்டதால், இடிக்கச் சொல்லி மாநகராட்சிக்கும் கடிதம் எழுதிகிறார். இதனால் அப்பார்ட்மெண்ட் வாசிகள் டென்ஷனாகி, ரவியின் அப்பா-அம்மாவை டென்ஷனாக்குகிறார்கள்.

அப்பா அச்யுத்குமார் மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகிறார். இதைக் கேள்விப்பட்டு ஊட்டியிலிருந்து வரும் ரவியின் அக்கா பூமிகா சாவ்லா, நான் கூட்டிக்கிட்டுப் போய் அவனை திருத்துறேன் என பெற்றோரிடம் சொல்லிவிட்டு, ரவியை ஊட்டிக்கு அழைத்துப் போகிறார். பூமிகாவின் கணவர் நட்டி, வனத்துறை அதிகாரி, மாமனார் ராவ் ரமேஷ் நீலகிரி மாவட்ட கலெக்டர், மாமியார் சரண்யா பொன்வண்ணன் பிரபல வக்கீல்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

ஊட்டிக்குப் போனாலும் தனது நேர்மறை குணத்திலிருந்து மாறாமல்  வீடுகட்டி அடிக்கிறார் ரவி. இதனால் அக்கா பூமிகா சாவ்லா, கணவன் வீட்டிலிருந்து வெளியேறும் நிலை.

க்ளைமாக்ஸ் என்ன? இரண்டேகால் மணி நேரப் படத்தை எப்படி ஒட்டி, உருட்டி ஓட்டுகிறார்கள் என்பதைச் சொல்கிறது இந்த பிரதர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பேஸ்மட்டம் ஸ்ட்ராங், பில்டிங் தான் வீக் என்பதைப் போல், பேஸிக் கண்டெண்ட் ஸ்ட்ராங்காக இருந்து, அதில் ஜெயம் ரவியைக் கொண்டு வந்து உட்கார வைத்த வரைக்கும் டைரக்டர் ராஜேஷ் கரெக்டாத் தான் இருந்துருக்காரு. இன்னும் சொல்லப் போனா, தனது பெர்மெனெண்ட் டெம்ப்ளேட்டான காமெடி ஜானரிலிருந்து டைவர்ட் ஆகி, ஃபேமிலி ஓரியண்டட் ஜானரில் ஜர்னி பண்ணுவோம்னு நினைச்சுருக்காரு. அதுவும் சரி தான். ஆனால் ரெண்டையும் போட்டு குழப்படியச்சதுல மேடை நாடகம், டிவி சீரியல் மாதிரி ஆகி மொத்தப் படமும் வீக்காகிப் போச்சு.

காமெடி ஏரியாவும் ஜெயம் ரவிக்கு கைகொடுத்த ஏரியா தான். ஆனா இவருக்கு சரியான காமெடிக் கூட்டாளி அமையாததால ஒத்தையில நின்னு விளையாட ரொம்பவே அல்லாடியிருக்கார் ரவி. ஒண்ணு ரெண்டு சீன்கள்ல விடிவி கணேஷ் முட்டுக் கொடுத்துப் பார்த்தும் பிரயோசனம் இல்லாமப் போச்சு. பெரும்பாலான காட்சிகளில் சோக முகத்துடனேயே இருக்கிறார் ரவி.

அட அக்கா—தம்பி செண்டிமெண்ட் ஏரியாவிலாவது வெயிட் இருக்கும்ணு பார்த்தா… “நீ என்னோட சொந்த மகனே இல்லடா”ன்னு அச்யுத்குமாரை சொல்ல வச்சு, நமக்கு ரத்தம் வர்ற அளவுக்கு சொறிய வச்சுட்டாரு டைரக்டரு. அக்காவாக பூமிகா. ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக்காரே, நல்லா பண்ணிருப்பார்னு எதிர்பார்த்தோம். அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் பிரதர்ங்கிற மாதிரி, எப்பப் பார்த்தாலும் தூங்கி எந்திருச்ச மாதிரியே இருக்காரு.

ஆமா.. படத்துல நட்டியின் தங்கச்சியாக வரும்  ஹீரோயின் பிரியங்கா மோகனுக்கு என்ன வேலை?  அது தெரிஞ்சா நாங்க ஒங்ககிட்ட சொல்லிடமாட்டோமா?

நட்டி, ராவ் ரமேஷ், சரண்யா பொன்வண்ணன் என எல்லாருமே மேடை நாடகத்தில் மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பது மாதிரி வசனம் பேசி இம்சை பண்ணுகிறார்கள்.

 ஸாரி பிரதர்ஸ் ராஜேஷ் எம். & ஜெயம் ரவி.

-மதுரை மாறன்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.