ஆம்ஸ்ட்ராங் பட்டியலின மக்களின் வழிகாட்டியா? அவரது பாதை விடுதலைக்கான அரசியல் பாதையா?
இவற்றில் ஆம்ஸ்ட்ராங்கின் உண்மையான உருவம் எது. பெரம்பூர், புளியந்தோப்பு பகுதியில் 90களில் வலுவாக இருந்த ரவுடிகளோடு தொடர்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங் அவர்கள் போர்க்குணம் மிக்கவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அந்த நிலத்தை சிறுகச் சிறுக சேமித்த பணத்தில் ஒரு செண்ட், ஒன்றரை செண்ட் நிலத்தை விலைக்கு வாங்கிய இடைநிலை, பட்டியலின மக்களை கத்தி முனையில் அடித்து துரத்தி ரங்கநாதனின் திட்டத்திற்கேற்ப உள்ளூர் பிரமுகர் கௌரி சங்கர் என்பவரின் துணையோடு ஆம்ஸ்ட்ராங் கட்சியினர் அதை ஆந்திர சமீன்தாரின் சொத்து எனவும் தங்களுக்கு சமீனின் வாரிசுகள் பவர் வழங்கியுள்ளதாகவும் கூறி அபகரித்தனர்.
ஆனால் படைபலமும், அதிகார பலமும் கொண்ட நிலமோசடி கும்பலை எதிர்கொள்ளமுடியவில்லை. மோரையைத் தொடர்ந்து அதனருகில் இருந்த வெள்ளானூரஃ எனப் பரவிய இவர்களின் நிலமோசடி கொள்ளைக்கு எதிராக மோரையில் எழுந்த போராட்டத்தை ஒடுக்க 2012 ல் புவனேஸ்வரன் ரவுடிகளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
இப்படியாக தமது வழக்கறிஞர் படை மற்றும் கட்சிப்படையோடு அவர் செய்தது அரசியலா? அல்லது கட்டப்பஞ்சாயத்தா? என்ற கேள்வி எழத்தானே செய்கிறது. சென்னை, திருவள்ளூர்,பகுதிகளில் ஆம்ஸ்ட்ராங் தமது பஞ்சாயத்திற்கு அனைத்துக் கட்சி அனைத்து ரவுடிகளை அணிசேர்ப்பது அதை எதிர்ப்பவர்களை கட்டம்கட்டுவது என்ற நிலைப்பாட்டில் இருந்ததனால் தான் ஆர்க்காடு சுரேஷ் போன்ற ரவுடிகளோடும் அவருக்கு மோதல் ஏறபட்டதா என்ற கேள்வியும் எழத்தானே செய்கிறது.
ஆருத்ரா நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆம்ஸ்ட்ராங்கும் ஆருத்ரா நிர்வாகத் தரப்பில் ஆர்க்காடு சுரேசும் எதிரும் புதிருமாக நின்று சண்டையிட்டதனாலேயே அவர் கொல்லப்பட்டார் என்ற தகவல் பரவியது.
ஆக சாமானிய மக்களுக்கே பாசக பின்புலம் தெரியும் சூழலில் பாசக எதிர்ப்பு அரசியலை ஆருத்ரா விவகாரத்தில் மையப்படுத்தி பெரும் போராட்டத்தை நடத்தி மக்கள் பக்கம் நிற்காமர் ஆம்ஸ்ட்ராங் கூட்டாளிகளால் எதற்காக ஆர்க்காடு சுரேஸ் கொல்லப்பட்டார்
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் ஆரம்பத்திலிருந்தே சதிவலை இருப்பதாக இயக்குநர் ரஞ்சித் போன்றவர்கள் பேசிவந்தனர்.ஆனால் தொடர் விசாரணையின் மூலம் பல கட்சிகளைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கின் சொந்த சாதி உட்பட பல சாதியினரும் ரவுடிகளும் இந்தப் படுகொலையில் கூட்டுப் பங்கு வகிப்பது அம்பலமானது.
இப்படியான சூழலில் நீதிப் பேரணி என்ற பெயரில் உரையாற்றிய ரஞ்சித் அவர்கள் ஆம்ஸ்ட்ராங் சென்னையையே கட்டியாண்டவர் என்றும் சென்னையில் தங்களை மீறி யாரும் ஏதும் செய்யமுடியாது என்று மார்தட்டுகிறார். உண்மையில் நிலம் தங்களது உரிமை என்று காலா படம் எடுத்த ரஞ்சித் பலரது நிலவுரிமையைப் பறிக்கத் துணை நின்றவருக்கு நீதி கேட்டது வியப்பாகத்தான் இருந்தது.அவர் பேசும் பௌத்த தலித்தியம் அவரை இப்படித்தான் நிறுத்தும் என்பது உண்மை தானே.
ஆக ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது அவர் விதைத்த வினையின் அறுவடையாகவே படர்வதை காவல்துறை விசாரணை மூலம் வெளிவரும் செய்திகளிலிருந்து பார்க்கமுடிகிறது.
உண்மையில் போர்க்குணம் மிக்க ஒரு கட்சித் தலைவரை அரசியல்படுத்தி தமிழகம் முழுமையுமுள்ள சாதி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக பட்டியலின மக்களின் காவலராக நிற்கவைக்க வக்கற்றவர்கள் இன்று அவரது படுகொலைக்குப் பிறகு புதுப் புது கதைகளைச் சொல்லி கடைவிரிக்கின்றனர். இவர்கள் தான் அவரது படுகொலைக்கு முதன்மைக் காரணம் என்பதை அவரது ஆதரவாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
செந்தமிழ்க்குமரன்