உ.பி.கள் அடம் – வியர்த்துக் போன எம்.எல்.ஏ..
புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை, துவக்க விழாவில் பேருந்தை இயக்க எம்.எல்.ஏ தடுமாறியதை கண்ட பொதுமக்கள் நக்கல் அடித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக, நேற்று திருச்சி மாவட்டத்துக்கு வருகை புரிந்தார். அப்போது ஓலையூர் சிப்பி நகர் குடியிருப்போர் சங்கத்தினர், தங்களது பகுதிக்கு கூடுதல் பேருந்து சேவை வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிமிடெட் திருச்சி மண்டலம் சார்பில், கே.கே.நகர் முதல் ஓலையூர் வரை மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையுடன் கூடிய கூடுதல் பேருந்து சேவையை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து பேருந்து இயக்குமாறு அங்கிருந்த உடன்பிறப்புகள் சிலர் எம்.எல்.ஏ..விடம் கோரிக்கை வைத்தனர்.
இதை அடுத்து ஆர்வக்கோளாறில் ஸ்டியரிங்கில் ஏறி அமர்ந்த எம்.எல்.ஏ பஸ்ஸை ஓட்ட முயற்சி செய்தார் . ஆனால் அரசு பேருந்தில் கியர் சிஸ்டம் அவருக்கு பிடிபடவில்லை. இதை அடுத்து அவருக்கு அருகிலேயே நின்ற அரசு பேருந்து ஓட்டுனர், சார் …கிளச்ச மிதிச்சு ஃபர்ஸ்ட் கியர் போடுங்க… கிளச்ச லேசா விடுங்க..
ஆக்சிலேட்டரை மெதுவா குடுங்க ….என்று வகுப்பு எடுக்க …அதன்படி எம்.எல்.ஏ..வும் வியர்க்க விறுவிறுக்க பேருந்தை சில அடி தூரம் நகர்த்தி விட்டு, ஆள விடுங்க சாமி என்று இறங்கிக்கொண்டார். இதை பார்த்த பொதுமக்கள்,” வடிவேல் படத்தில் வரும் “ஓட்டவே தெரியாத உனக்கு புல்லட் ஒரு கேடா “என்ற காமெடி போல உள்ளது என்று கிண்டல் செய்தனர்.
-அரியலூர் சட்டநாதன்