உடலுக்கு நன்மை தரும் பழங்கள் வாங்கினால் உள்ளத்துக்கு நன்மை தரப் புத்தகங்கள் இலவசம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

உடலுக்கு நன்மை தரப் பழங்கள், உள்ளத்துக்கு நன்மை தரப் புத்தகங்கள். தஞ்சாவூரில் இருக்கிறது இந்த மனிதரின் பழக்கடை. கடையின் பெயர் தோழர் பழக்கடை … அங்கே சிரித்தபடி சிவப்புத் துண்டுடன் அமர்ந்து இருப்பவா் ஹாஜா மைதீன். பழங்களோடு புத்தகங்களும் இவர் கடையில் வரிசைகட்டி அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

 

இலவச புத்தகங்கள்:

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

உடலுக்கு நன்மை தரும்  பழங்களைத்தான் இவர் விற்கிறாரே தவிரப் புத்தங்களை அல்ல. பழம் வாங்க வரும் அனைவருக்கும் ஏதாவது ஒரு புத்தகத்தை இலவசமாகத் தருகிறார்.( சமூகம் வரலாறு அறிவியல் இலக்கியம் ஓவியம் உட்பட அனைத்து வகைப் புத்தகங்களும்) ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இது இங்கே தொடர்ந்து நடந்து வருகிறது.

இதன் மூலம் சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தத் தோழர் பழக்கடை மிகப் பிரபலமாக அறிமுகமாகியிருக்கிறது. இன்னும் இருக்கிறது ஆச்சரியம். 60 வயதான இந்தக் குடும்பத்தலைவர் தஞ்சாவூர், பூக்காரத் தெருவைச் சேர்ந்தவர். இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட இவர் தன் மகளைக் கிறிஸ்துவருக்கும் இரண்டு மகன்களை இஸ்லாமியப் பெண்களுக்கும் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

சமாதானம் இளைஞர் நற்பணி மன்றம்:

இவர் மனைவி கவுரி; அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர். தஞ்சையின் மையப் பகுதியில் இருக்கும் பூக்காரத் தெரு, ஒரு காலத்தில் சண்டை, சச்சரவுகளுக்குப் பேர் பெற்றது. சாதி, மதச் சண்டைகளைத் தவிர்க்க நினைத்து, 1981-இல், ‘சமாதானம் இளைஞர் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பைத் துவங்கினார் ஹாஜாமைதீன்.

சாதி, மதம் பார்க்கக் கூடாது; ஆண்கள், குடித்து விட்டால் தெருவுக்குள் வரக் கூடாது; சண்டை, சச்சரவுகளை நியாயமான முறையில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்; ஏழை, எளிய மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்ய வேண்டும்’- இவைதான் இந்த மன்றத்தின் குறிக்கோள்கள், கொள்கை.
எனினும், மாற்றம் உடனே நடந்து விடவில்லை.

ஆண்டுதோறும் இங்கு ஐந்து நாட்கள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, வெற்றி பெறுவோருக்கு, அரசியல் விழிப்புணர்வு புத்தகங்களைப் பரிசாக வழங்கி இருக்கிறார் மன்றத்தின் மூலம் ஹாஜாமைதீன். அப்படி இவர் நடத்திய போட்டி மூலமாகத் தான், இவர் மனைவி கவுரி இவருக்கு அறிமுகமானார்.

கௌரி அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி.முதலில் ஏற்பட்ட நட்பு, ஈர்ப்பாகி, காதலாகவும் ஆனது. ஆனால் மதம், பெரிய தடையாக இருந்தது.

கவுரி, பிளஸ் 2 முடிக்கிற வரைக்கும் காத்திருந்த ஹாஜாமைதீன் பிறகு அவரது வீட்டிற்குச் சென்று பெண் கேட்டிருக்கிறார். அவர்கள் ஒப்பு கொள்ளவில்லை.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஹாஜாமைதீன் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. பார்த்தார். வேறு வழி தெரியவில்லை. கௌரியை அழைத்துக்கொண்டு நாகூர் சென்று பள்ளி வாசலில் திருமணம் செய்து கொண்டார்.

அலைபாயுதே திரைப்படம் போல அதை வெளியே சொல்லாமல், அவரவர் வீட்டுக்கு அவரவர் சென்று, அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் இருவீட்டாருக்கும் விவரம் தெரிய வர, பெரிய பிரச்னை ஆகிப் போயிற்று. வேறு வழியில்லாமல், வீட்டை விட்டு வெளியே வந்து, தனிக்குடித்தனம் ஆரம்பித்தனர் இருவரும். 3 பையன்கள், ஒரு பெண்; ஒரு பையன், விபத்தில் இறந்து போய் விட்டார்.

 

பழங்கள் வீணாகி விட்டால் மாற்றுதருவது:

இவர் கடை பில் புத்தகத்தில், ‘என் கடையில் வாங்கிய பழங்கள் வீணாகி விட்டால் அதை மாற்றித் தருவேன்’ என்ற வாசகத்தை அச்சடித்துள்ளார்.

அதன்படி பழங்களை வாங்கிக்கொண்டு போனவர்கள், வீணாகிவிட்டது என்று எடுத்து வந்தால்,

உடனே வேறு பழங்களை மாற்றித் தந்துவிடுகிறார்.
இதனால் மிகத் தொலைவிலிருந்தும் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இவரது தோழர் பழக்கடையைத் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள் படிக்க:

https://angusam.com/confusion-is-your-name-department-of-school-education1/

 

அங்குசம் யூடியூப்

https://youtube.com/@AngusamSeithi

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.