அங்குசம் சேனலில் இணைய

காசுள்ளபோதே வாங்கிக்கொள் ! கஷ்டம் வந்தால் அடகு வைத்துக்கொள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மூன்று வருடத்திற்கு முன்பு வாடகைக்கு வீடு தேடி அலைந்து கொண்டிருந்தேன். எங்கேயும் வீடு கிடைக்கவில்லை.  பேச்சுலருக்கு வீடு கிடையாது என்பதுதான் அநேக நபர்களின் பதில்.  ஆகையால் நோ ப்ரோக்கர் ஆப்-ல் பார்த்து தொடர்பு கொண்டு பேசினேன். வர சொன்னார்கள். நேரில் சென்றேன்.

மூணு மாடி வீடு. பார்க்கவே பிரம்மாண்டமாக இருந்தது. வீட்டு வாசலில் நின்று கால் பண்ணதும் உள்ளே வர சொன்னார். ஆள் பார்க்க ஆச்சாரமாக இருந்தார். அனேகமாக அரசுப் பணியில் இருந்திருப்பார் என்று நினைத்துக்கொண்டேன்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

வீட்டை காமித்தார்.  ஒரே ஒரு அறை மட்டுமே இருந்தது. ஆனால் பெரிதாக இருந்துது.

என்னைப் பார்த்து ” வீடு புடிச்சிருக்கா” என்று கேட்டார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“புடிச்சிருக்கு” என்றேன்.

“எப்போ வரீங்க” என்றார்.

நகை சேமிப்புஒரு வாரம் ஆகும் என்றேன். தொடர்ந்து வீடு தொடர்பாக சகிதமும் பேசினர். அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தேன்.

சிறிது நேரம் கழித்து ஒரு நாற்காலியில்  என்னை உட்கார வைத்து என்னைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை கேட்டார். சாதியை தவிர்த்து மற்றவையனைத்தும் சொல்லிவிட்டேன்.

உங்களுடைய பேச்சும், அணுகுமுறையும் எனக்கு பிடித்திருக்கிறது. நீங்கள் கட்டாயம் இங்கே வந்தே ஆக வேண்டும் என்று கூறினார். சரி என்று கூறிவிட்டு, கிளம்புத் தயாரான என்னை நிறுத்திச் சொன்னார்.

இந்த வீட்டுக்கு வந்தவங்க எல்லாம் நல்லா  இருந்திருக்காங்க.  நீயும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன். இங்கே வந்தால் உனக்கு பணம் சேரும் என்றார்.

அது போக,  பணம் சேர்ப்பதற்கான வழியை நான் உனக்கு சொல்கிறேன் கேள் என்று கூறினார்.

அட இன்னாடா இந்த ஆள் வேற கடுப்பேத்துறானே என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே அவரை கவனித்தேன்.

அவர் தொடர்ந்தார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

▪️சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை நிரந்தர வங்கிக் கணக்கில் வைத்து விடு.

▪️ஒரு பகுதியை தங்கம் வாங்குவதற்கு என்று ஒதுக்கி வைத்துவிடு. எல்லா காலத்திலும் கை கொடுக்கும்.

▪️சேமிப்பு கணக்கில் கொஞ்சம் பணம் வைத்துக் கொள்.

▪️கையில் கொஞ்சம் லிக்யூட் கேஷ் வைத்துக் கொள். அது அன்றாட செலவிற்கு உதவும்.

இந்த வகையில் பணத்தை சேமிக்கவும், கையாளவும் பழகிக் கொள் உன் எதிர்காலத்திற்கு நல்லது என்றார். சரி என்று தலையாட்டிவிட்டு நகர்ந்தேன். அவர் வீட்டிற்கு வாடகைக்கு செல்லவில்லை. சில நாட்கள் கழித்து அவர் சொன்னதை யோசித்துப் பார்த்தேன். உண்மையில் எனக்கு அது புதிய தகவல் தான். இப்படி யாரும் எனக்கு சொல்லிக் கொடுத்ததே இல்லை.

பணத்தின் மீது சேமிப்பின் மீதும் எனக்குத் தெரிந்த முறையில்தான் கையாண்டு கொண்டு இருந்தேன். இப்படி திட்டமிட்டு எதையும் செய்ததில்லை.

நகை சேமிப்பு
நகை சேமிப்பு

அதேபோல் தங்கத்தின் மீதும் எனக்கு எப்போதும் மதிப்பும் ஈர்ப்பும் இருந்தது இல்லை. அதன் பிறகு என் பார்வை தங்கத்தின் மீது திரும்பியது.

அன்று அவர் சொன்ன அந்த வழிமுறைகளை இன்று வரை தவறாமல் நடைமுறைப்படுத்தி வருகிறேன். தங்கமும் தவறாமல் வாங்கி விடுகிறேன். கடந்த வருடமும் அதற்கு முந்தைய வருடமும் வாங்கிய தங்கத்தையும் பதிவாக போட்டிருப்பேன்.

நீங்களும் சேமிக்க பழக வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தவே இவற்றை பதிவிடுகிறேன்.

காசுள்ள போதே வாங்கிக்கொள்.

கஷ்டம் வந்தால் அடகு வைத்துக்கொள்.!

Save Gold Safe Life. ❤️

 

—  ரஞ்சித் ராஜா.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.