மன்னார்புரம் TO பஞ்சப்பூர் கும்மிருட்டு தேசிய நெடுஞ்சாலை!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

பல நூறு கோடி செலவு செய்து பஞ்சப்பூரில் தமிழக அரசு விமானநிலையமா இல்லை பேருந்து நிலையமா என பிரம்மிக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தை சமிபத்தில் தமிழக முதல்வர் அவர்கள் திறந்துவைத்தார். மேலும் மேற்படி முனையம் ஜீன் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால் திருச்சி மாநகரிலிருந்து புதிய பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு மன்னார்புரம் வழியாக இரவு நேரத்தில் பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த தேசிய நெடுஞ்சாலை வழி தடத்தில் சுமார் நான்கு கிலோ மீட்டர் வரை ஒரு விளக்கு கூட இல்லை. இதன் காரணமாக இப்பகுதியில் சமுகவிரோத செயல்களும், விபத்துகளும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

மக்கள் நீதி மய்யம் சார்பில்  கோரிக்கை
மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இது தொடர்பாக கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே மன்னார்புரம் பகுதியில் ஒரு ஹைமாஸ் விளக்கை திருச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் நிதியிலிருந்து அமைத்துதர மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடதக்கது.

எனவே திருச்சி மாவட்ட நிர்வாகம் பஞ்சப்பூர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் உடனடியாக கலந்து பேசி திருச்சி மன்னார்புரம் பகுதியில் ஒரு ஹைமாஸ் விளக்கு மற்றும் புதிய பேருந்து முனையம் வரை நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து விளக்குகளை அமைக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் கேட்டுகொள்கிறோம்.

 

வக்கீல்.S.R.கிஷோர்குமார்,

மக்கள் நீதி மய்யம் கட்சி,

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.