மீனாட்சி அம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு ! அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தொடர்ந்து குவிந்து வரும் பக்தர்கள் கடந்த இரண்டு நாட்களில் 1.5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் ஒரேநாளில் 1லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா கடந்த 17ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்ற நிலையில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அக்டோபர் 2ஆம் தேதி வரை மண்டல பூஜை நடைபெற்றது.

madurai meenakshi amman templeநவராத்திரி விழா வருவதை ஒட்டி அக்டோபர்2ம் தேதி வரை மண்டல பூஜை நடைபெற்ற நிலையில்  நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் முதல் 72ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்த நிலையில்,

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விசேஷ பூஜை உள்ளிட்டவைகளோடு வடக்கு கோபுரம் பகுதியில் இருக்கக்கூடிய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வந்த யாகசாலை பூஜையில் நடைபெற்ற மண்டல பூஜை கோலாலமாக நிறைவு பெற்றது. விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் நெடுவரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

madurai meenakshi amman templeஇந்தநிலையில் தொடர் விடுமுறை என்பதால் ஒவ்வொரு நாளும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்களும் தரிசனம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2நாட்களில் 1,56,606 பேரு சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்றோடு மண்டலபூஜை நிறைவுபெற்ற நிலையில் அரசு விடுமுறை வார விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர் எண்ணிக்கை இன்றும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.