அங்குசம் சேனலில் இணைய

புற்றுநோய் கண்டறிதல் (ம) சிகிச்சை விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்த திருச்சி கலெக்டா் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் கண்டறிதல் (ம) சிகிச்சை விரிவாக்க திட்டம் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து  (12.05.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டம், உறையூர் காந்திபுரம் நகர்புர நலவாழ்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்.இ.ஆ.ப., அவர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைத்து செயல்பாடுகளை பார்வையிட்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இத்திட்டத்தின் மூலம் பொதுவான வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் ஆகிய மூன்று புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கி உயிரிழப்புகளை தவிர்த்து அவர்களின் வாழ்நாளை நீட்டித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தும் உயரிய நோக்கோடு மக்களின் நலன் கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண் சுகாதார தன்னார்வலர்கனைக் (WHV) கொண்டு மேற்கூறிய புற்றுநோய்களுக்கான விழிப்புணர்வு வழங்கி மற்றும் பரிசோதனை செய்து கொள்வதற்கான அழைப்பிதழை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 167 நலவாழ்வு மையங்கள் மற்றும் 84 அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களில் இச்சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு புற்றுநோய்க்கான இலவச பரிசோதனை வசதிகள் பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே வழங்கப்பட உள்ளது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இத்திட்டத்தின்படி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை வாய்புற்றுநோய் பரிசோதனையும் மற்றும் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பபைவாய் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு புற்றுநோய்க்கான அறிகுறி கண்டறியப்பட்டால் அரசு மருத்துகல்லூரி மருத்துவமனை, 10 மருத்துவமனைகள் மற்றும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு மேல்சிகிச்சசைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 22.20 இலட்சம் நபர்களுக்கு வாய் புற்றுநோய் பரிசோதனைகளும் மற்றும் 7.76 இலட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்பொதுமக்கள் பணிபுரியும் இடங்களான அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில்சார் நிறுவனங்களில் மருத்துவக் குழுவினரைக் கொண்டும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவமனைகளிலும் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் இலவச புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், மருத்துவமனை முதல்வர் மரு.எஸ்.குமரவேல், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு.கோபிநாத், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஹேமசந்த் காந்தி, கூடுதல் மாநகர நல அலுவலர் மரு.எழில்நிலவன் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.