கஞ்சா போதையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கஞ்சா போதையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞர்கள் 6 பேர் கைது..! தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகர பேருந்தை சனிக்கிழமை இரவு திருவாய்பாடியைச் சேர்ந்த ஓட்டுனர் ரமேஷ் (54) என்பவர் ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது கும்பகோணம் பாலக்கரை அருகே சாலையின் நடுவே கஞ்சா போதையில் இளைஞர்கள் நின்று கொண்டு போக்குவரத்து நெரிசலை உண்டாக்கிக்கொண்டு இருந்தனர், அப்போது ஓட்டுநர் ரமேஷ் ஓரமாக செல்லுங்கள் என்று ஆரண் அடித்துள்ளார் அதற்குள் அவர்களுக்கும் அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக ஆத்திரமடைந்த கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பேருந்துக்குள் தாக்கியதுடன் கீழே தள்ளி கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பயணிகள் அச்சத்துடன் சிதறி ஓடினர் இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போது அவ்வழியாக சென்று கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் நாடிமுத்து மற்றும் அருண்குமார் ஆகிய இருவரும் இந்த தாக்குதலை ஒளிப்பதிவு செய்துள்ளனர் இதனைப் பார்த்து அந்த கஞ்சா இளைஞர்கள் எங்களையே படம் எடுக்கிறீர்களாடா என தகாத வார்த்தைகள் கூறி செய்தியாளர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

இந்த தாக்குதலில் NewsJ செய்தியாளர் நாடிமுத்து மற்றும் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் அருண் குமார் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த ஓட்டுனர் ரமேஷ் மற்றும் கும்பகோணம் பகுதி செய்தியாளர்கள் நாடிமுத்து அருண்குமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தகவல் அறிந்து கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர் அதில் கும்பகோணம் பாலக்கரை சேர்ந்த சுதர்சன், ஜனார்த்தனன், உதயகுமார், கார்த்திகேயன், மாரிமுத்து, சந்தோஷ் ஆகிய ஆறு நபர்கள் சேர்ந்த கும்பல் தாக்கியுள்ளது ஒளிப்பதிவு செய்யப்பட்ட படங்கள் மூலம் தெரிய வந்தது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இதனை அடுத்து கும்பகோணம் துணை கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் உத்தரவின் பெயரில் கும்பகோணம் கிழக்கு காவல்துறை ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையில் குற்றவாளிகளை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இரண்டு மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தகவல் – சென்னை பிரஸ் கிளப்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.