100 கிலோ கஞ்சாவை சாப்பிட்ட செம்மறி கூட்டம்!
கிரீஸின் தெசலியில் உள்ள அல்மிரோஸ் நகருக்கு அருகே ஒரு செம்மறி ஆடுகளின் கூட்டம் பசியால் ஒரு கிரீன்ஹவுஸில் வளர்க்கப்பட்ட கிட்டத்தட்ட 100 கிலோ கஞ்சாவை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. கிரீஸ், நாட்டை தாக்கிய புயலுக்குப் பிறகு வெள்ளத்தில் இருந்து செம்மறி ஆடுகள் அந்த கிரீன்ஹவுஸில் தஞ்சம் அடைந்தன. பின்னர் ஆடு மேய்ப்பன் அவற்றைக் அங்கு கண்டுபிடித்தபோது, ஆடுகள் விசித்திரமாக நடந்துகொள்வதை அவர் கவனித்தார்.
இது குறித்து பேசியிருந்த பண்ணையின் உரிமையாளர் யானிஸ் பௌரோனிஸ், கஞ்சா செடிகளை சாப்பிட்ட மந்தையில் உள்ள செம்மறி ஆடுகள் “ஆடுகளின் வழக்கத்தை விட மிகவும் உயரமாக குதித்தன ” இது சாதாரண ஆடுகளிடம் நடக்காத காரியம் என்று வியப்புடன் கூறுகிறார், இது சிரிப்பதற்காகவா அல்லது அழுவதற்கா என்று எனக்குத் தெரியவில்லை.
கஞ்சா செடிகளை ஆடுகள் சாப்பிட்டதால் நாங்கள் நிறைய உற்பத்தியை இழந்தோம். நாங்கள் வெள்ளத்தில் இருந்தபோது கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்தோம். இப்போது ஆடுகள் கிரீன்ஹவுஸ்க்குள் நுழைந்து மீதம் இருந்ததை சாப்பிட்டது. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஆடுகளை தாண்டிப்பதா..! என்று நகைச்சுவையாக புலம்பினார்.
இதேபோன்ற ஒரு சம்பவம் இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள காவல்துறையினர், நீதிமன்றத்தில் போலீஸ் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த 500 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
— மு.குபேரன்