அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

5 கிலோ கஞ்சாவுடன் கைதாகிய குற்றவாளிகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம், (17.05.2025) ஜீயபுரம் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட நியூ காட்டுர், எண்.3/141 என்ற முகவரியில் வசித்து வரும் சுபாஷினி 38/25 க.பெ கிருஷ்ணன் என்பவர் தனது வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படையினர் மேற்படி நபரின் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் மேற்படி சுபாஷினி என்பவர் 1360 கிராம் (மதிப்பு – ரூ. 13600/-) அரசால் தடைசெய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய கஞ்சா போதைப்பொருளை விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக, இராம்ஜிநகர் காவல் நிலைய 5 . 122/25 U/S 8 (c) r/w 20 (b) (ii) (B) NDPS ACT 6. நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேற்படி எதிரியிடமிருந்து கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுபாஷினி, பவித்ரன், சுந்தர்ராஜ்
சுபாஷினி, பவித்ரன், சுந்தர்ராஜ்

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மேலும், நியூ காட்டுர் சுடுகாடு முன்பு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படையினர் மேற்படி பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டதில், 1) பவித்ரன் 28/25, S/O. சந்திரசேகர், NO.3/130, புதிய காட்டூர், இராம்ஜி நகர் மற்றும் 2) சுந்தர்ராஜ் 30/25 S/o. மோகன், No. 3/67. மில் காலனி, இராம்ஜி நகர் ஆகியோர் அரசால் தடைசெய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய கஞ்சா போதைப்பொருளை விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக, இராம்ஜிநகர் காவல் நிலைய குற்ற எண். 123/25 U/S 8 (c) r/w 20 (b) (ii) (B) NDPS ACT அனுப்பபட்டுள்ளனர். மேற்படி எதிரிகளிடமிருந்து கஞ்சா 5.880 கிலோகிராம் (மதிப்பு 15. 58,800/-) கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

Admission Enquiry Form

மேலும், இது போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை, குட்கா விற்பனை, போலி மதுபான விற்பனை, கள் விற்பனை, போதை பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மதிமயக்கும் பிற போதை வஸ்துக்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாக தெரிய வந்தால் பொதுமக்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 8939146100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கொடுப்போரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.