பிரபல நடிகர் சைன் டாம் சாக்கோ குடும்பத்தினர் பயணித்த கார் விபத்து !

0

தெலுங்கு மற்றும் மலையாள நடிகரான சைன் டாம் சாக்கோ, அவரது தந்தை சி.பி.சாக்கோ உள்ளிட்ட குடும்பத்தினர் நான்கு பேர் நேற்று (ஜூன் 5) இரவு பெங்களூரில் இருந்து தர்மபுரி  நோக்கி  பயணித்து வந்துள்ளனர். அப்போது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொம்பன் நாயக்கன் அல்லி எனும் இடத்தில் முன்னே சென்ற லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், அவரது தந்தை சி.பி.சாக்கோ சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நடிகர் சைன் டாம் சாக்கோ உள்ளிட்டு விபத்தில் காயமடைந்த மூவரும் தற்போது, பாலக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

விபத்தில் இறந்த சி.பி.சாக்கோவின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.