அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கார் குண்டு வெடிப்பு ! தீவிர பாதுகாப்பில் விமான நிலையங்கள் !

திருச்சியில் அடகு நகையை விற்க

நேற்று இரவு டெல்லி செங்கோட்டை பகுதியில் கார்குண்டு வெடிப்பை தொடர்ந்து 9 பேர் பலியாயினர், அதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரபடுத்த  அறிவுறுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையம் ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மதுரை விமானநிலைய உள் வளாகம் மற்றும் வெளி வளாக பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதிவிரைவு அதிரடி படை வீரர்களால் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது மதுரை விமான நிலையத்திற்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையம்

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மதுரை விமான நிலையம் உள்வளாகப் பகுதிகளில் விமான நிலைய ஓடுபாதை கண்காணிப்பு கோபுரம் ஆகியவற்றில் மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்களும் மதுரை விமான நிலையம் மற்றும் முன் வளாகம் QRT எனப்படும் அதிவிரைவு அதிரடி படை வீரர்களும் தமிழகப் போலீசாரம் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

விமானநிலையத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர தணிக்கை செய்யப்பட்டு மோப்பநாய்கள் வர வழைக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

விமானநிலைய வாகன நிறுத்துமிடம் சோதனைசாவடி பகுதிகள் மற்றும் பொதுமக்கள்  கூடும் இடங்களில் கண்காணிப்பு   தீவிரபடுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது வெடிகுண்டு தடுப்பு போலீஸார் மற்றும் மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிரசோதனை செய்யப்படுகிறது. அதே போல் விமான நிலைய வளாகத்திற்குள் வரும் பயணிகள் பார்வையாளர்கள் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் விமானநிலையத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னே அனுமதிக்கப்படுகிறது.  மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்புபடை மற்றும் காவல்துறை சார்பில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் மறு ஏற்பாடு உத்தரவு வரும் வரை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புபணிகள் தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.

 

—  ஷாகுல்,  படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.