அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விஷமத்தனமான பிரச்சாரம் செய்யும் இது போன்ற சேனல்களை- குழந்தைகள்_எச்சரிக்கை

0

திருச்சியில் அடகு நகையை விற்க

#குழந்தைகள்_எச்சரிக்கை !! POGO சேனலில் ஜெய் ஜெகனாத் என்ற கார்ட்டூன் சீரிஸ் ஓடிக்கொண்டுள்ளது. நிறைய வண்ணநிறங்களில் குழந்தகளை கவரும் வகையில் உள்ளது. கவர்ந்து இழுப்பது மட்டுமல்ல அவர்களின் பிஞ்சு மனதில் விஷத்தை தடவும் அபாயகரமான கேடுகெட்ட வேலையையும் செய்து வருகிறது.

வீடியோ லிங்

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அந்த நிகிழ்ச்சியில் வடமாநில கோயில் ( பூரி ஜெகநாதர்) வடிவமைப்பு காட்டப்படுகிறது . அந்த கோயிலுக்கு காவி வேடமிட்டு வரும் வில்லன் கதாபாத்திரம் , திடீரென காவி ஆடைகளை களைந்துவிட்டு , ” என் பெயர் மஃதின் கான் ” நான் கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்க போகிறேன் என வசனம் பேசிவிட்டு , பூநூல் போட்டு, கொண்டை போட்டு , பெண்களை விட அதிகமாக நகையும், நளினத்தோடும் , இருக்கும் கோயில் அய்யரையும் , பளிச்சென நெற்றி பொட்டு வைத்திருக்கும் ராஜாவையும் கைது செய்து, பிடித்து சிறையில் வைக்கிறான்.பிறகு கடவுளின் உதவியோடு நெற்றியில் நாமம் போட்டு இருக்கும் வைணவ மதத்தை சேர்ந்த சிறுவன் எதிரிகளை வீழ்த்தி , இந்து கடவுள்களை காப்பாற்றுவது போலக் கதைச் சித்திரம் உள்ளது.

POGO சேனல்
POGO சேனல்

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இதில் எதிரிகள் அனைவரும் இஸ்லாமியர்கள், இஸ்லாமிய பெயர் தாங்கியவர்கள். எதிரிகளாகவும் ,வில்லன்களாகவும் காட்டப்படக் கூடியவர்கள் குல்லா அணிந்துள்ளார்கள் , தாடி வைத்துள்ளார்கள் , பச்சை நிறத்தில் உடை அணிந்துள்ளார்கள். ஹீரோவாக காட்டப்படக் கூடிய கதாபாத்திரங்கள் நெற்றியில் நாமம் , காவி நிறம் அணிந்து உள்ளது.
இது என்ன அயோக்கியத்தனம் ?

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்த நாட்டில் , மண்ணில் பிறந்து தங்களுக்கு பிடித்த கடவுளை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வரும் சக மனிதனை தீவிரவாதியாக , திருடனாக , வில்லனாக , சித்தரித்து அதனை பால் மணம் மாறாத குழந்தைகளின் மனதில் விஷமாக விதைத்தால் , அதை பார்த்து வளரும் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் சேரும் போது , தெருவில் விளையாடும் போது , பொது இடங்களில் செல்லும் போது மாற்று மதத்தை சேர்ந்தவர்களை எந்த கண்ணோட்டத்தில் பார்த்து வளர்வார்கள் ? இது ஆரோக்கியமான சமுதாயத்தை வளர்த்து எடுக்குமா ?!

POGO சேனல்
POGO சேனல்
ஏற்கனவே Chotta Bheem. என்கிற ஒரு கேடு கெட்ட நிகழ்ச்சி பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது.அதில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அரக்கன் , பேய், கெட்டவன். கறுப்பாக இருப்பவர்கள் கெட்டவர்கள். காவி நிற உடையணிந்து இருப்பவன் நல்லவன்.இப்படி ஒரு விஷம பிரச்சாரத்தை குழந்தைகள் மத்தியில் செய்து வருகிறார்கள்.மதவெறியையும், நிறவெறியையும் ஊட்டிவருகின்றனர்.
குழந்தைகள் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும் . இரண்டரை வயது வரை உள்ள குழந்தைகள் YouTube ல் பாடல் , கதைகளை கேட்கின்றனர். நடக்கவும் , ஓடவும் தொடங்கிய பிறகு பெரும்பாலும் Cartoon TV சேனலுக்கு வளர்கிறார்கள். பெற்றோர்களும் டிவியை போட்டுவிட்டு வேலைகளை செய்கின்றனர். அந்த நேரத்தில் குழந்தைகளை சூறையாடும் படுபயங்கரமான வேலையை இந்த டிவி சேனல்கள் செய்து வருகின்றன.
சுத்தமான உடை, ஆரோக்கியமான உணவு கொடுத்துவிட்டு இதுபோன்ற வெறுப்பை விதைக்கும் , அறுவெறுப்பான கருத்துக்களை ,சிந்தனைகளை குழந்தைகள் மனதில் விதைத்தால் அனைத்தும் வீண். குறுகிய சிந்தனையோடு , பரந்த உலகில் வசிக்கும் போது புளுவை விட கேவலமாக இந்த உலகம் மதவெறி, ஜாதிவெறி சமூகத்தை பார்த்து காரி உமிழும்.அதெற்கெல்லாம் இடம் கொடுக்காமல் குழந்தைகள் வளரும் போதே தமிழ் மொழியின் இனிமை, அறிவியல் கருத்துக்களை ஊட்டி வளர்க்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று விஷமத்தனமான பிரச்சாரம் செய்யும் இது போன்ற சேனல்களையும் , நிகழ்ச்சிகளையும் அரசாங்கம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.