தூய்மைப் பணியாளர்களிடத்தில் சாதிய பாகுபாடு ! சர்ச்சையில் தேனி மாவட்ட பேரூராட்சிகள் !

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தேனி மாவட்ட பேரூராட்சிகளில் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களிடையே கூட சாதிய ரீதியில் பாகுபாடு பார்க்கப்படுவதாக, பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எஸ்சி எஸ்டி தூய்மை பணியாளர்களை தூய்மைப்பணிக்கு ஈடுபடுத்தி விட்டு, மாற்று சமூக தூய்மை பணியாளர்களை தூய்மை பணிக்கு ஈடுபடுத்தாத பேரூராட்சி செயலாளர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசு தொற்சங்கம் கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகளில் பணியாற்றிய வரும் எஸ்சி எஸ்டி தூய்மை பணியாளர்களை தூய்மைப் பணிக்கு ஈடுபடுத்தி விட்டு, மாற்று சமூக தூய்மை பணியாளர்களை தூய்மை பணிக்கு ஈடுபடுத்தாமல் மாற்றுப் பணிக்கு ஈடுபடுத்தும் பேரூராட்சி செயலாளர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசு தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர் ஜெகநாதன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

தூய்மைப் பணியாளர்களிடத்தில் சாதிய பாகுபாடு
தூய்மைப் பணியாளர்களிடத்தில் சாதிய பாகுபாடு

தேனி மாவட்டத்தில் ஜாதி ஆணவபோக்குடன் தூய்மை பணியில் எஸ்சி. எஸ்டி பணியாளர்களை மட்டுமே வேலை வாங்குவதன் மூலம் தீண்டமையை கடை பிடிக்கும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க பல புகார்களை பேரூராட்சி அரசு செயலாளர், பேரூராட்சி இயக்குநர், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர், தேனி மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல செயலர் மற்றும் உறுப்பினர் அவர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்து துப்புரவு பணியாளர்களை தூய்மை பணிக்கு அனுப்பாமல் மெத்தன போக்கோடு சாதியை பாகுபட்டை கடைபிடித்து வரும் பேரூராட்சி செயலர் அலுவலர் மீது வருகின்ற 05.12.2024ம் தேதிக்குள் வன்கொடுமைகள் திருத்தச்சட்டம் 2015ன் படி பேரூராட்சி செயல் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தூய்மை பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சமூக தூய்மை பணியாளர்களை தூய்மைபணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தவறும்பட்சத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிக்குட்பட்ட காவல் நிலையங்களில் செயல் அலுவலர்கள் மீது மற்றும் சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளர்கள் மீது வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் 2015ன் படி பாதிகப்பட்ட துப்புரவு பணியாளர்கள் மூலமாக புகார் கொடுக்க உள்ளனர்.

 

— ஜெய்ஸ்ரீராம்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

1 Comment
  1. பாஸ்கரன் says

    அப்படி சாதி பார்ப்பவர்களை அரசு உடனடி டிஸ்மிஸ் செய்யவேண்டும்

Leave A Reply

Your email address will not be published.