அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கேட்டரிங் கலையும் கேண்டீன் தொழிலும் ! ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி –28

திருச்சியில் அடகு நகையை விற்க

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புக்குப் பின்னர் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என பார்த்து வருகிறோம். கடந்த இதழில், ரெஸ்டாரண்ட் வகைகள் மற்றும் பேக்கரி குறித்து விரிவாக பார்த்தோம். இந்த இதழில், கேண்டீன் வைப்பது பற்றியும், எங்கெல்லாம் அதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றியும் அதற்கான சாத்தியக்கூறுகள் சிலவற்றையும் பார்ப்போம்.

கேண்டீன் பல இடங்களில் வைக்கலாம். எங்கெல்லாம் மக்கள் உள்ளனரோ அங்கெல்லாம் கேண்டீன் வைக்க வாய்ப்புள்ளது. அதிலும், கேண்டீன் என்பது ஒரு நிறுவனத்தின் உள்ளே உள்ளவர்களுக்கான உணவகம் ஆகும்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கல்வி நிறுவனங்கள் கேண்டீன், ஹாஸ்டல் மெஸ், அரசு நிறுவனங்கள் கேண்டீன், வங்கிகளில் கேண்டீன், மருத்துவமனை உணவகங்கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால் உணவகங்கள் ஆகிய பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.

கேண்டீன் தொழில்பல தொழிற்சாலைகளிலும் அதன் பணியாளர்களுக்கான கேண்டீனை பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் நடத்துகின்றனர். சாஃப்ட்வேர் நிறுவனங்கள், கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களில் கேண்டீன் வைத்து வெற்றிகரமாக தொழில் நடத்தும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். இவற்றுள் இன்று பெரும்பாலும் வெளி ஆட்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விடுவதால், நிறுவனம், ஒப்பந்ததாரர், பணியாளர் / மாணவர்கள் / ஆசிரியர் என அனைத்து தரப்பினரும் பயனடைகின்றனர்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

பாலாஜி
பாலாஜி

பாலாஜி என்ற ஒரு தொழில் முனைவோர், தனது அப்பா காலத்து வங்கி கேண்டீனை இன்று பல இடங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளார். அப்பாவின் அனுபவ பாடமும், பாலாஜியின் கேட்டரிங் படிப்பும் அனுபவமும் சேர்ந்து இன்று, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி கேண்டின், வருமான வரி அலுவலக கேண்டீன், திருச்சி மாநகராட்சி கேண்டீன், என இன்னும் பல விரிவாக்கங்களை செய்து கொண்டுள்ளார். தன்னை ரோட்டரியில் ஈடுபடுத்திக் கொண்டு சமூக சேவகராகவும் இருக்கிறார். இவர் திருச்சி துவாக்குடியில் உள்ள அரசு கல்லூரியில் கேட்டரிங் படித்தவர் ஆவார். வாடிக்கையாளர் சேவை மற்றும் தரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார்.

பொதுவாக பல இடங்களில், கேண்டீன் மற்றும் உணவகம் வைக்கும்பொழுது, நிறுவனத்தின் தலையீடு சற்று இருக்கும். காரணம், தனது நிறுவனம் சார்ந்தவர்களுக்கு கிடைக்கும் உணவு வகைகள், தரம் மற்றும் விலை ஆகியவற்றில் சமரசம் செய்ய மாட்டார்கள். அதனை வலியுறுத்த ஒப்பந்ததாரருக்கு விதிமுறைகள் விதிப்பர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கேண்டீன் தொழில்கேண்டீனாக இருந்தால் மெனு, விலை ஆகியவற்றில் தலையீடு அதிகம் இருக்கும். ஆனால், உணவகம் இருந்தால், பொதுவாக மெனு, விலை ஆகியவற்றை விட தரத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

தியேட்டர்கள், ஷாப்பிங்மால்கள் போன்ற இடங்களில், விலை அதிகமாக இருக்கும். ஆனால், தரத்திற்கு தற்போது முக்கியத்துவம் அதிகம்.

கேண்டீன் மற்றும் நிறுவன உணவகங்களில், கிட்சன், சாப்பிடும் இடம் ஆகியவற்றுக்கான இடவசதிகளை பெரும்பாலும் நிறுவனமே செய்து கொடுத்துவிடும். இன்னும் சில இடங்களில், குறிப்பாக தொழிற்சாலைகளில், கிட்சன் உபகரணங்கள் கூட வைத்திருப்பார்கள். அதன் பின்னர் ஒப்பந்ததாரர்களிடம் இதனை கொடுப்பர். ஒப்பந்ததாரரின் முக்கியமான வேலை, நன்முறையில் உணவு தயாரித்து, வாடிக்கையாளரை திருப்திபடுத்துவதுதான்.

இந்த தொழிலின் முக்கிய அனுகூலம் என்னவென்றால், நமக்கு குறிப்பிட்ட அளவு வியாபாரம் நிச்சயமாக இருக்கும். எவ்வளவு மக்கள் வருவார்கள், எவ்வளவு உணவு தேவைப்படும், எவ்வளவு வரவு செலவு இருக்கும் என அனைத்தையும் ஓரிரு மாதங்களில் தெரிந்து கொள்ளலாம். நமது திட்டமிடலுக்கு இது மிகவும் ஏதுவான தொழில் ஆகும். மேலும், இந்த தொழிலில், நேர மேலாண்மை மிகவும் எளிமையாக திட்டமிடலாம்.  பெரும்பாலான நிறுவனங்களில் மாலைக்குள் வேலை முடிந்துவிடும். அதிலும் அலுவலக கேண்டீனாக இருந்தால், காலை முதல் மாலை வரை மட்டுமே வேலை இருக்கும். நமது வருமானத்தின் தேவைக்கெற்ப கேண்டீன்களை ஒப்பந்தத்தில் எடுத்து விரிவாக்கமும் செய்யலாம்.

மருத்துவமனை கேண்டீன்களில், நோயாளிகளுக்கான சிறப்பு மெனுவை தயாரிக்க ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும். பெரும்பாலான மருத்துவமனைகளில், ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவர்களே நோயாளிகளுக்கும், கேண்டீன்களுக்கும் உணவினை அறிவுறுத்திவிடுவார்கள்.

இவ்வாறு பல்வேறு இடங்களில் கேண்டீன் வாய்ப்புகள் உள்ளன. இன்னும் சில தொழில் வாய்ப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.

தொடரும் …

கபிலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.