தவறவிட்ட நகை மற்றும் 30000 பணத்தை ஒப்படைத்த நபர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் வழங்கிய திருச்சி எஸ்.பி!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா வளைவு பகுதியில் கடந்த 13.04.2025-ஆம் தேதி பத்மா என்பவர் இறந்து விட்டார். மேற்படி இறந்தவரது துக்க நிகழ்வுக்கு வந்த மாலதி 44/25, க.பெ. பழனிராஜா என்ற பெண் தனது ஹேண்ட் பேக்கை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் மாட்டி விட்டு துக்க நிகழ்வுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு தனது ஹேண்ட் பேக்கை மறந்தவாக்கில் அங்கேயே விட்டு விட்டு சென்றுவிட்டார். அந்த ஹேண்ட் பேக்கில் ரூ.30000/- பணம், 1/2 கிராம் தங்க தோடு. 3 Android phone ஆகியவை இருந்துள்ளன.
2) பின்னர், மேற்படி மாலதிக்கு அவரது ஹேண்ட் பேக்கை எங்கு வைத்தோம் என்று தெரியாமல் துவாக்குடி காவல் நிலையத்திற்கு அன்று 19.00 மணியளவில் வந்து புகார் அளித்ததின் பேரில், துவாக்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருக்கும் அச்சமயத்தில் அண்ணா வளைவு பகுதியில் இருந்த ஒரு இரு சக்கர வாகனத்தில் ஹேண்ட் பேக் ஒன்று தொங்கி கொண்ருந்ததாகவும், அதில் ரூ. 30000/-பணம், 1/2 கிராம் தங்க தோடு. 3 Android phone ஆகியவை இருப்பதாக அருண் பிரசாத், புத்தர் தெரு, துவாக்குடி மலை மற்றும் எட்வர்ட், பெரியார் திடல், துவாக்குடி மலை ஆகியோர் எடுத்து வந்து நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
3) அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ஹேண்ட் பேக்கை சரிபார்த்த போது மேற்படி காணாமல் போனதாக கூறப்பட்டவர்களின் ஹேண்ட் பேக் என தெரிய வந்ததுடன், பேக்கில் வைத்திருந்த இருந்த பொருட்கள் அனைத்து சரியாக உள்ளது என உறுதி செய்த்தின் பேரில், துவாக்குடி காவல்துறையினர் அதனை உடனடியாக மேற்படி ஹேண்ட் பேக்கை உரியவரிடம் ஒப்படைத்து அவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர்.
4) மேற்படி தவறவிட்ட ஹேண்ட் பேக்கை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மனிதாபிமானமிக்க நபர்களான அருண் பிரசாத் மற்றும் எட்வர்ட் ஆகிய இருவரின் நற்செயலினை பாராட்டி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வ நாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் மேற்படி இரு நபர்களையும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி தன்னலமில்லாத செயலை ஊக்குவித்தார்.