அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

”திருப்பதி லட்டு” கடவுளை ரோட்டுக்கு கொண்டு வந்த – சந்திரபாபு நாயுடு அரசியல்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தனது சுய நலத்துக்காக கடவுளோடு விளையாடி வருகிறார், உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என மதுரையில் ஆந்திரா முன்னாள் அமைச்சர் ரோஜா பேட்டி..

ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் சன்னிதியில் சாமி தரிசனம் செய்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா கூறுகையில் “உண்மையில் மிக கஷ்டமாக இருக்கு, திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார், சந்திரபாபு நாயுடு தனது சுய நலத்துக்காக எதையும் செய்வார்.

2026 January 1- 7 ANGUSAM Book அங்குசம் வார இதழ்

ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் சந்திரபாபு நாயுடு ஒரு திட்டமும் செய்யவில்லை, சந்திரபாபு நாயுடு தனது தவற்றை மறைக்கும் விதமாக லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார், மார்ச் உடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலம் முடிந்துள்ளது, ஜூலை மாதத்தில் திருப்பதி கோவிலுக்கு நெய் வந்தது, அதில் 4 லாரி நெய் அனுமதிக்கப்பட்டது, 4 லாரி நெய் வனஸ்பதி கலந்ததால் நிராகரிக்கப்பட்டது.

திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜெகன் மோகன் ரெட்டியை அரசியல் ரீதியாக பூஜ்யமாக்கவே சந்திரபாபு நாயுடு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சந்திரபாபு நாயுடுவுக்கு பக்தியும் இல்லை, கடவுள் மீது நம்பிக்கை இல்லை, கடவுளை தனது சுய நலத்துக்காக பயன்படுத்துகிறார், சந்திரபாபு நாயுடு தனது கட்சி அலுவலகத்தில் இருந்து பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது, தவறு நடந்திருந்தால் திருப்பதி தேவஸ்தானம் பேசி இருக்கிறது, லட்டு விவாகரத்தில் நடவடிக்கை எடுக்காமல் சந்திரபாபு நாயுடு நாடகம் செய்து வருகிறார்.

மதத்தை வைத்து சந்திரபாபு நாயுடு அரசியல் செய்து வருகிறார், மத்தியில் கூட்டணியிலும், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு நடத்தும் எந்தவொரு விசாரணையும் சந்திக்க தயாராக இருக்கிறோம், திருப்பதி தேவஸ்தான லட்டுவில் எந்தவொரு கலப்படமும் கலக்கவில்லை.

சந்திரபாபு நாயுடு அரசியலுக்காக கடவுளை ரோட்டுக்கு கொண்டு வந்துள்ளார், லட்டுவில் கலப்படம் கலந்து உள்ளதா? இல்லையா? என மக்கள் குழப்பத்தில் உள்ளனர், லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும், லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு மிக கீழ்த்தரமான அரசியல் செய்கிறார், சந்திரபாபு நாயுடுவுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என் அனைத்து கோவில்களிலும் வேண்டிக் கொள்கிறேன்.

சந்திரபாபு நாயுடு முடிந்தால் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும், இல்லையெனில் ராஜினாமா செய்ய விட்டு வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும், சனாதனத்தின்படி பேசும் பவன் கல்யாண், ஆனால் அவர் வீட்டில் சனாதனத்தை கடைப்பிடிப்பதில்லை, துணை முதல்வர் பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடு எழுதி கொடுத்ததை பேசி வருகிறார்” என கூறினார்.

— சாகுல்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.