கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள திருச்சி மாவட்ட ”ஆட்சித்தலைவா்” அழைப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி தினமான 02.10.2024 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளாா்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்ந்த அனைத்து கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிh;வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை கிராம சபையின் பாா்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீா் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்ககம், இணையவழி மனைப்பிாிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், மாற்று திறனாளிகள் இயக்ககம் கணக்கெடுப்பு உாிமைகள் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், வடகிழக்கு பருவமழை போன்றவற்றை கிராம சபையில் விவாதிக்கப்படும்.
காந்தி ஜெயந்தி தினமான 02.10.2024 அன்று காலை 11.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என தொிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவா், திரு.மா.பிரதீப்குமார், இ.ஆ.ப., அவா்கள் தொpவித்துள்ளாா்.
செய்தி வெளியீடு:
உதவி இயக்குநா்,
செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம்.
திருச்சிராப்பள்ளி.