சசிகுமார் – சிம்ரன் காம்பினேஷனில் முதல் படம் ஆரம்பம்!

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என பெயரிடப்பட்டிருக்கிறது.  அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றாலும் சசிகுமாரின் பிறந்த நாளை (செப்டம்பர் 28)முன்னிட்டு படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சசிகுமாருடன் முதல் முறையாக சிம்ரன் நடிக்கிறார் . இவர்களுடன் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத, ஆடை வடிவமைப்பு பணிகளை நவா ராஜ்குமார் கையாள்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள்  நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படப்பிடிப்பு பணிகள் அக்டோபர்  முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு கோடை மாத விடுமுறையில்  வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம்  உற்சாகத்துடன்  தெரிவித்துள்ளது.

‘குட்நைட்’, ‘லவ்வர்’ போன்ற ஃபீல் குட் திரைப்படங்களை தயாரித்து தமிழ்த் திரைப்பட உலகில் தரமான பட தயாரிப்பு நிறுவனம் என்ற முத்திரையை பதித்து ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரையுலக வணிகர்களிடத்திலும் நன்மதிப்பை பெற்றிருக்கிறது மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம்.

 

— மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.