அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) போஸ்டர் ரிலீஸ்!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர் படமான ‘ஜான் டோ’ (John Doe),  நவம்பர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அசத்தலான ஒரு போஸ்டர் மூலம்  படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளைத் தயாரித்த அர்கா மீடியாஒர்க்ஸ்  (Arka Mediaworks) நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்ட ,  பிரசாத் தேவினேனி  ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை மதுமிதா இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் ( Nicholas Chevaillier) இணைந்து படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

ஒளிப்பதிவு : பிரீதா ஜெயராமன் ISC, இசை: முஜீப் மஜீத், எடிட்டிங்:விஜய் வெங்கடரமணன் , தயாரிப்பு வடிவமைப்பு: அஷ்வினி காலே , பிஆர்ஓ: யுவராஜ்

—   ஆண்டவர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.