சிவகார்த்திகேயனின் பொலிடிகல் ‘ரூட்’! புது ‘டீம்’
நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் இப்போது கலை, இலக்கிய, பண்பாட்டுப் பிரிவு என்ற புது அணியை ஆரம்பித்துள்ளார். எஸ்.கே.வின் வழிகாட்டுதலின்படி, தென் சென்னை கிழக்கு மாவட்ட நற்பணி இயக்கத்தின் ‘கலை இலக்கிய பண்பாட்டுப் பிரிவு’ சார்பில் சென்னை பெசன்ட் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தமிழ் தாத்தா’ உ.வே.சா நூலகத்திற்கு சிறப்பு ஆய்வு சுற்றுலா மேற்கொள்ளப்பட்டது.
நமது செம்மொழி தமிழின் மாண்பையும், பழம்பெரும் வரலாற்றையும் இன்றைய தலைமுறையினரும், நற்பணி இயக்கத்தை சார்ந்த தோழர்களும் ஆழமாக உணர்ந்து அறிந்து கொள்ளும் உயரிய நோக்கத்தோடு இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இப்பயணத்தின் போது, சங்க இலக்கியங்களையும் அரிய ஓலைச்சுவடிகளையும் தேடித்தேடி தொகுத்து தமிழுக்கு உயிர்கொடுத்த தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களின் அரிய நூல்கள், பழங்கால சுவடிகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள முறைகளை நூலக நிர்வாகிகள் முழுமையாக விவரித்து விளக்கமளித்தனர்.
— ஆண்டவர்


Comments are closed, but trackbacks and pingbacks are open.