சிவன் கோவில் நகைகள் எங்கே?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கிராம சபைக் கூட்டத்தில் ஆதாரப் புகைப்படங்களுடன் சமூக ஆர்வலர் சரமாரிக் கேள்வி – பரபரப்பு!

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொப்பம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சமூக ஆர்வலர் வெங்கடேஷ், ஊராட்சியில் நிலவும் அடிப்படை வசதிகள் குறித்தும், பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்தும் பேசினார்.

கிராம சபைக் கூட்டம்அப்போது, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கொப்பம்பட்டி சப்தரிஷீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான வெள்ளி நகைகள் குறித்து கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கோவிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் வெள்ளி நாகாபரணம் மற்றும் அம்பாளுக்குச் சொந்தமான முழு வெள்ளிக் கவசம் ஆகியவை தற்போது எங்கு உள்ளன? யாருடைய பொறுப்பில் உள்ளன? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், பல ஆண்டுகளாக கோவில் நகைகளுக்கு முறையான எடை மதிப்பீடு (துலாபாரம்) செய்யப்படாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதற்கு ஆதாரமாக, சுவாமிகளுக்கு வெள்ளி நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டிருந்த புகைப்படங்களையும் கிராம சபைக் கூட்டத்தில் காண்பித்தார். கோவில் நகைகளை உடனடியாக மீட்டு, பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்து, முக்கிய விசேஷ நாட்களில் சுவாமிகளுக்கு அணிவித்து பக்தர்கள் தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து, கோவிலில் தற்போது பூஜை செய்து வரும் அர்ச்சகர் வயது முதிர்வு காரணமாக முறையாக பூஜைப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும், பக்தர்கள் கொண்டு வரும் பூஜைப் பொருட்கள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணாவதாகவும் தெரிவித்தார். எனவே, கோவிலுக்கு தகுதியான புதிய அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளாதது குறித்தும் அதிருப்தி தெரிவித்தார்.

கிராம சபைக் கூட்டம்கொப்பம்பட்டி கிராமத்தின் வழியாகச் செல்லும் ராமநதி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆற்றின் கரையோரத்தில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, முறையான குப்பைக் கிடங்கு அமைக்க வேண்டும். அண்மையில் பெய்த கனமழையால் ஊருக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கோவில் நகைகள் குறித்த கேள்விகள், ஆதாரப் புகைப்படங்கள் மற்றும் கிராமத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் என அடுத்தடுத்து பல்வேறு கோரிக்கைகளை சமூக ஆர்வலர் முன்வைத்ததால் கொப்பம்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் நகைகள் தற்போது எங்கே உள்ளன? அவற்றின் இருப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்களா? என்பதே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.