அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அதிரடி விரிவாக்கம் ! ஒரே நாளில் 3 புதிய கிளைகள் திறப்பு!
தீபாவளி சிறப்பு பலகாரப் பெட்டிகள் அறிமுகம் – வாடிக்கையாளர்கள் உற்சாக வரவேற்பு!
இனிப்பு மற்றும் கார வகைகளில் தனித்துவமான சுவையையும் தரத்தையும் வழங்கி வரும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனம், தனது வணிக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக ஒரே நாளில் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் மூன்று புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிளையை அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கே.ஆர்.வி. கணேசன் திறந்து வைத்தார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ள புதிய ஷோரூமை நிர்வாகப் பங்குதாரர்களான ஜி. செல்வராணி கணேசன், நிஷா, சிபி ஆகியோர் திறந்து வைத்தனர்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிளையை சிறப்பு விருந்தினர் ராமநாதன் முன்னிலையில், அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி. அஸ்வின் திறந்து வைத்தார்.
மூன்று இடங்களிலும் பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கேற்றி திறப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து வணிகப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் முதல் விற்பனை தொடங்கப்பட்டது. விழாவில் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தீபாவளி பண்டிகைக்காக பிரத்யேக பலகாரப் பெட்டிகள்!
திறப்பு விழாவையொட்டி அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனம், தீபாவளிப் பண்டிகைக்கான சிறப்பு பலகார வகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
நிறுவனத்தின் சொந்தப் பண்ணையில் கிடைக்கும் பசும்பால் மற்றும் வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. திறப்பு விழாவிற்கு வந்திருந்த பொதுமக்கள் மத்தியில் இத்தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குப் பரிசளிக்கும் வகையில் பிரத்யேக குடும்ப பலகாரப் பெட்டிகள் (Festive Gift Boxes), பக்கெட் இனிப்பு வகைகள், ராயல் மற்றும் விஐபி டின் பாக்ஸ்கள் (VIP Tin Boxes) உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் புதிய கிளைகளில் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களை மேலும் இனிமையாக்கும் வகையில் பல்வேறு அளவுகளிலும், சிறப்பு வடிவமைப்புகளிலும் பரிசுப் பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி மற்றும் தஞ்சாவூரில் ஒரே நாளில் மூன்று புதிய கிளைகளைத் தொடங்கியிருப்பது அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.