பெண் இயக்குனர்னு சொல்லாதீர்கள் – ‘ஜான் டோ’ மதுமிதா வேண்டுகோள்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

‘அர்கா மீடியாஸ்’ பிரசாத் தேவினேனி, ஷோபு யெர்லகட்டா தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்து நவ.13-ஆம் தேதி உலகெங்கும் தியேட்டர்களில் ரிலீஸாகிறது ‘ஜான் டோ’. மதுமிதா டைரக்‌ஷனில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சிருஷ்டி, சஞ்சனா நடராஜன், அர்ச்சனா, ஜாரா, அனுபமா குமார், மாஸ்டர் நீரவ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘ஜான் டோ’வின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நவ.03-ஆம் தேதி நடந்தது. இதில் பேசியவர்கள்…

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

பிரசாத் தேவினேனி, “எங்களுடைய நிறுவனத்தின் முதல் தமிழ்ப்படம் என்பதில் பெருமை கொள்கிறேன். தொடர்ந்து தமிழில் படங்கள் தயாரிப்பதற்கு நல்ல தொடக்கமாக இப்படம் அமையும். இதை தெலுங்கில் எடுப்பதாகத் தான் முதலில் ப்ளான் பண்ணினோம்.

பிரசாத் தேவினேனி
பிரசாத் தேவினேனி

ஆனால் இந்தக் கதைக்கு மிகவும் அவசியமான கலாச்சாரப் பின்னணியும் இயல்புத்தன்மையும் தமிழில் எடுக்கும் போது தான் சரியாக வெளிப்படும் என உணர்ந்து தமிழிலேயே ஆரம்பித்துவிட்டோம். படத்தின் வேலைகளை முடித்துவிட்டு, அதை எப்படி வியாரமாக்குவது என்ற கவலை கண்முன்னே வந்த போது தான் ஏஜிஎஸ் நிறுவனம் எங்களுக்கு உதவ முன்வந்ததும்  பாதுகாப்பான கைகளில் படத்தை ஒப்படைத்துவிட்ட நிறைவு ஏற்பட்டது”.

சஞ்சனா நடராஜன்
சஞ்சனா நடராஜன்

சஞ்சனா நடராஜன், “நன்றி சொல்ல ஆரம்பிச்சா இந்த நிகழ்ச்சியின் நேரம் முடிந்துவிடும். அதனால் எல்லோருக்கும் நன்றி. இதில் நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிச்சிருக்கேன். செண்டிமெண்ட் கலந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம் இது”

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சிருஷ்டி, “ஹரியானாவைச்  சேர்ந்த நான் முதலில் தமிழ் பேசக் கற்றுக் கொண்டதே “தமிழ் எனக்குத் தெரியாது” என்ற வார்த்தைகளைத் தான். நான் முதன்முதலில் விமானத்தில் பறந்தது சென்னைக்குத் தான். முதன்முதலில் கடலைப் பார்த்ததும் சென்னையில் தான். இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் இன்னும் சிறப்பாக தமிழ் பேசுவேன்”.

சிருஷ்டி
சிருஷ்டி

டைரக்டர் மதுமிதா, “இந்தப் படத்தின் டிரெய்லரை ரிலீஸ் பண்ணி உதவிய டைரக்டர்கள் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், பா.இரஞ்சித், புஷ்கர்-காயத்ரி,மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோருக்கு நன்றி. எந்த ஜானரில் படம் எடுத்தாலும் அதில் மனித உணர்வுகள் தான் என்னுடைய படங்களின் முக்கிய அம்சமாக இருக்கும்.

மீடியாக்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள், என்னை மட்டுமல்ல என்னைப் போன்ற இயக்குனர்களை பெண் இயக்குனர்கள் என குறிப்பிட்டு அழைக்கவேண்டாம், எழுத வேண்டாம். வெறும் இயக்குனர் என குறிப்பிட்டாலே போதும். கேரளம்-தமிழ்நாடு எல்லையில் உள்ள குறிஞ்சி என்ற இடத்தில் கதை நடக்கிறது. கேரள போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் தாஸும் தமிழ்நாடு போலீஸ் அதிகாரியாக சஞ்சனா நடராஜனும் நடித்துள்ளனர். தண்ணீருக்கடியில் வரும் சில சீன்களுக்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளார் கேமராமேன் ப்ரீத்தா ஜெயராமன்”.

அர்ஜுன் தாஸ்
அர்ஜுன் தாஸ்

அர்ஜுன் தாஸ், “ஒரு பெண் இயக்குனராக, ஸாரி.. ஒரு இயக்குனராக மட்டுமல்ல, ஒரு படையையே வழிநடத்தும் தலைமை வீரராக எங்களை வழிநடத்தியுள்ளார் டைரக்டர் மதுமிதா”.

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.