திருவெறும்பூரில் போதை விழிப்புணர்வு பேரணி

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருவெறும்பூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் இளைஞர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்துவதை தவிர்த்து விளையாட்டில் கவனம் செலுத்த வலியுறுத்தி பள்ளி மாணவர்களை கொண்டு நடந்த விழிப்புணர்வு பேரணியை திருவெறும்பூர் ஏ எஸ் பி இன்பா தொடங்கி வைத்தார்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

போதை விழிப்புணர்வு பேரணிதிருவெறும்பூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் மாணவர்களும் இளைஞர்களும் போதை பழக்கத்திற்கு அடிமையாகுவதை தவிர்த்து விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியானது திருவெறும்பூர் அரசு ஐடிஐயில் இருந்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பெல் கணேசா ரவுண்டானா வரைசென்று தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் பகுதியை சுற்றி மீண்டும் அரசு ஐடிஐயில் நிறைவடைந்தது இதில் ஐடிஐ மாணவர்கள் மற்றும் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டு  சாகசங்களை பேரணியின் போது மாணவர்கள் நிகழ்த்தி காட்டினர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

பேரணியை திருவெறும்பூர் ஏஎஸ்பி இன்பா தொடங்கி வைத்தார் இதில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் மற்றும் போலீசாரும் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.