யாருடைய உழைப்பையும் ஏமாற்றாதீர்கள்..!!
சில தினங்களுக்கு முன் ஒரு வியாபார தளத்திற்கு Ad Video செய்தோம். 20 நாட்களுக்கு மேல் ஆகியும் எங்களுக்கு Ad Payment-க்கான எந்த தொகையும் தரவில்லை. Call செய்தும் பதில் இல்லை. அப்படியே எடுத்தாலும் பேசிய தொகையில் இன்னும் குறைத்தால் தான் பணம் தருவேன் என்று சொல்கிறார்கள். வீடியோ எடுத்து Publish செய்து அது 50 ஆயிரம் Views போன பிறகு இப்படி.. இனிமேல் அதை Delete செய்தாலும் எங்களுக்கு தான் நட்டம்.
உங்கள் அனைவருக்கும் சில கேள்விகள்…?
நீங்கள்.. உங்கள் வியாபாரம் 10 பேர்க்கு தெரிய வேண்டும் அதில் இருந்து சம்பாதிக்க வேண்டும் Business வளர வேண்டும் என்று ஒரு விளம்பர நிறுவனத்தை தொடர்பு கொள்கிறீர்கள்..
“பணம்” சம்பாதிக்கதானே?????
அதே பணத்திற்காக தானே நாங்களும் 10 பேருக்கு சம்பளம் கொடுத்து இவ்வளவு செலவு பண்ணி Camera வாங்கி நீங்கள் சொல்வது போல் உங்கள் இடத்தை அழகாக காட்டி Video எடுத்து கொடுக்கிறோம்..??
நான் சம்பாதிக்கனும் ஆனா உனக்கு காசு தரமாட்டேன் என்றால் என்ன அர்த்தம்???
மாத சம்பளம் வாங்கும் நபர்களுக்கு மாதம் முதல் தேதியில் வேலை பார்த்த காசு வரவில்லை என்றாலோ 1 நாள் 2 நாள் தாமதம் ஆனாலோ மனம் தவிக்கும்..
தினம் தினம் வேலை செய்து சம்பாதிக்கும் நபர்களுக்கு அன்று மாலை கையில் காசை பார்த்தால்தான் நிம்மதி..
அதே போல் தான் எங்களுக்கும்.. ஒரு Project முடிவில் Editor-க்கு அழைத்து வரும் Camera Man-க்கு நமக்கு என லாபத்தை பார்க்க வேண்டும்.. அப்பதான் உழைத்த உழைப்புக்கு மதிப்பு.. இன்று நாம் உழைத்து அதில் வரும் காசு என் தேவைக்கு இன்று உதவவில்லை என்றால் அது காசே இல்லை வெறும் காதிகம் தான்.. அந்த நிலையை கொடுப்பது இது போல் உழைப்பை உறியும் அட்டைகள் தான்..
முக்கியமாக தெரிந்த நபர்கள்.. சொந்த காரர்கள்… நண்பர்களுக்கு வேலை செய்து கொடுப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்… யாரோ தெரியாத ஒருவர் கூட நாணயமாக இருப்பார்.. ஆனால் அறிந்த தெரிந்த நபர்கள் தான் இப்படி…
எங்களுக்கு இந்த காசு பெருசு இல்ல.. இதை காட்டிலும் 100 மடங்கு அடுத்த 10 நாட்களில் சம்பாதிக்க முடியும்.. ஆனால் ஏன் இப்படி இருக்காங்க மனிதர்கள் என்றுதான் வருத்தமா இருக்கு..
உழைப்பை மதிக்க கற்று கொள்ளுங்கள்… அப்போதான் நீங்க உழைக்குறது உங்க கிட்ட கடைசி வரை இருக்கும்..