என்ன நடக்கிறது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை சீரமைக்க 7 பேர் கொண்ட வழிகாட்டுகுழு செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவோம். சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேறு ; க்ரைம் அ.செல்வராஜ் அவர்களை தலைவராகவும் விமலேஷ்வரன் அவர்களை பொதுச் செயலாளராகவும் கொண்ட சென்னை பிரஸ் கிளப் என்பது வேறு. இரண்டும் வெவ்வேறு பெயர்களை கொண்ட இருவேறு சங்கங்கள்.

பதிவுத்துறை தலைவர் அவர்களே இதை தெளிவுபடுத்தி அரசாணை வெளியிட்ட போதும்; மாவட்ட அளவிலான பதிவாளர் ஒருவரிடம் விலைக்கு வாங்கிய ஒரு உத்தரவை வைத்துக் கொண்டு பெருமாள் (எ) பாரதிதமிழன் கும்பல் ஆடியது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

பாரதி தமிழன் என்கிற பெருமாள்
பாரதி தமிழன் என்கிற பெருமாள்

அந்தக் கும்பலுக்கும் தற்போதைய வழிகாட்டுதல் குழுவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருப்பது வேதனையானது. திரும்ப திரும்ப எடுத்து சொல்லியும் எங்களுக்கு சொந்தமான சென்னை பிரஸ் கிளப் பெயரையும் முறையாக பதிவு செய்யப்பட்ட லோகோவையும் சட்ட விரோதமாக பயன்படுத்தி வருகிறார்கள். சொல்லி சலித்து விட்டது. ஆனாலும் தொடர்ந்து மீறுகிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இருபத்தைந்து ஆண்டுகளில் பலமுறை பலரும் பலவிதமாக முயற்சி செய்தும் நடத்தி காட்ட முடியாத தேர்தலை, தற்போது நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது எங்கள் அமைப்பான சென்னை பிரஸ் கிளப்பின் கருப்பு மை பூசி அழிக்கும் போராட்டம் தான் என்பதை மறுக்க முடியுமா? எமது சங்கம் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்குள் சாவகாசமாக அமர்ந்து கொண்டு, எமது சங்கத்தை உதாசீனப்படுத்தும் வகையில் புறக்கணிப்பதும் அவமதிப்பதும் துரதிர்ஷ்டவசமானது.

பாரம்பரியமான சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மாண்பை சிதைத்து, சரக்கடித்து விட்டு கவிழ்ந்து கிடக்கும் மதுபான பாராக மாற்றியவர்கள்; பத்திரிகையாளர் சங்கத்தின் பெயரை பயன்படுத்தி ஊழல் மோசடியில் திளைத்தவர்கள்; தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்தவர்கள் இன்னும் அதே சங்க கட்டிடத்திற்குள் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த பத்திரிகையாளர் நலனுக்கான மன்றமாக, சங்கமாக அது செயல்பட வேண்டும் என்று மாற்றத்திற்காக போராடியவர்கள் சங்கத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

சங்க விதியில் அதற்கு இடமில்லையாம். கடந்த 25 ஆண்டுகளாக தேர்தலே நடத்தாமல் முறைகேடாக சங்கத்தை நடத்துவதற்கு புறவாசல் வழியாக இணைச் செயலாளரான பாரதிதமிழனுக்கு உள்ள உரிமை உண்மையான பத்திரிகையாளன் உறுப்பினராவதற்கு இல்லை. பத்திரிகையாளர்கள் புத்தாக்கம் பெறுவதற்கான மன்றம், ஃபுல் அடித்து விட்டு கண்டவன் மல்லாந்து கிடப்பதற்கான சத்திரமாக இருக்கலாம்; ஆனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் தவிர்த்த மற்ற பத்திரிகையாளர்களுக்கு இல்லை. அதற்கு சங்க விதி இடம் கொடுக்கவில்லை. எந்த சங்க விதி உங்களை உள்ளே அமரவைத்து இருக்கிறது? தேர்தல் நடத்தும் பொறுப்பை வழங்கியிருக்கிறது?

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சென்னை பத்திரிகையாளர் மன்றம்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்

சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கும் பாரதிதமிழனுக்கும் என்ன சம்பந்தம்? அவர் எப்போது உறுப்பினர் ஆனார்? எப்போது நடைபெற்ற தேர்தலில் அவர் இணைச் செயலராக ஆனார்? பத்திரிகையாளராக பணியாற்றி ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெற்றுவரும் கீதப்பிரியன் மன்றத்தின் தலைவர், பத்திரிகையாளனுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத இந்து குழுமத்தில் பணியாற்றி ஒய்வுபெற்ற நூலகரான நரேஷ்குமார் மன்றத்தின் முக்கியமான நிர்வாகி. கடந்த 20 ஆண்டுகளாகவே, எந்த ஒரு பத்திரிகையிலும் பணியாற்றிடாத அசுதுல்லா மன்றத்தின் அதிமுக்கிய நிர்வாகி. இவர்கள் மூவரும் சேர்ந்து பத்திரிகையாளர் மன்றத்தின் லெட்டர் பேடில் வழிகாட்டுதல் குழுவுக்கு உறுப்பினர் சேர்க்கை தொடர்பான முடிவு குறித்து கருத்து தெரிவிக்கிறார்கள்.

இந்த அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது? பத்திரிகையாளன் என்பதற்கான எந்த வரையறைக்குள்ளும் வராத இவர்கள் மன்றத்தின் தலைமையில் இருக்கலாம். அதன் வழியே, தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடையலாம். ஆனால், இன்றளவும் உரிமைக்காக களத்தில் நிற்கும் உண்மையான பத்திரிகையாளனை விதியை காட்டி ஒதுக்கி வைப்பீர்களா? சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை எங்கள் பெயருக்கு மாற்றிக் தாருங்கள் என்றா கேட்டோம்? இல்லை, முக்கிய பதவிகளில் எங்கள் சங்க உறுப்பினர்கள் அமர்த்தப்பட வேண்டும் என்று நிர்ப்பந்தம் கொடுத்தோமா?
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை சீரமைக்கும் மிக முக்கியமான கட்டத்தை எட்ட உறுதுணையாக இருந்த சென்னை பிரஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் நிபந்தனைகள் இன்றி உறுப்பினர்களாக சேர்த்து கொள்ளப்பட வேண்டும் என்பது தானே எங்களது ஒற்றை கோரிக்கை சம்பிரதாய அடிப்படையிலாவது, வழிகாட்டுதல் குழுவின் சார்பில் அழைத்துப் பேசியிருக்கிறீர்களா? இல்லை, இதுதான் காரணம் என்பதையாவது நாலுவரியில் எழுதியிருக்கிறீர்களா? இப்போதைக்கு உறுப்பினர் சேர்க்கை நடத்தி, தேர்தலை நடத்துவது தான் எங்கள் பணி சங்கப் பெயர் பற்றிய விவகாரத்திற்குள் நாங்கள் நுழையவில்லை என்பதாக சொல்லி தந்திரமாக நழுவுகிறீர்கள்.

அது கிடக்கட்டும் உங்களது வரம்பில் நின்றே இயங்குங்கள். நீங்கள் உங்கள் மன்றத்தின் விதிப்படியே செயல்படுங்கள். நாங்கள் எங்கள் சங்கத்தை நடத்தி கொள்கிறோம். எந்த வகையிலும் CHENNAI PRESS CLUB – சென்னை பிரஸ் கிளப் என்ற பெயரையும் எங்கள் லோகோவையும் பயன்படுத்தாமல் இருப்பது உத்தமம்.

ஒரு காலத்தில் அது உங்கள் சங்க பெயராகவும் லோகோ இருந்தது என்ற வாதத்தை வைக்கிறீர்கள். உங்களது சங்கப் பதிவுகளின்படியே கூட, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தைத்தான பதிவு செய்து இருக்கிறீர்கள். சென்னை பிரஸ் கிளப் என்பதாக அல்ல. உங்களிடம் இருந்து எதுவொன்றையும் நாங்கள் சட்ட விரோதமான முறையில் பறித்து விடவில்லை. சட்டப் படியான பெயராக பதிவு செய்து இருக்கிறோம்.

இன்னும் சொல்லப்போனால், சென்னை பிரஸ் கிளப் என்ற பெயரில் நாங்கள் சங்கமாக பதிவு செய்யும் வரையில் கூட, சென்னை பத்திரிகையாளர் மன்றம் என்ற பெயரில் பதிவு செய்துவிட்டு, பட்டா நிலத்திற்கு அருகே அமைந்த புறம்போக்கு இடத்தைப் பயன்படுத்திக் கொள்வதைப்போல, சென்னை பிரஸ் கிளப் என்ற ஆங்கிலத்தில் அமைந்த பெயரையும் சேர்த்து பயன்படுத்தி வந்தீர்கள்.

அந்த அனுபோகத்தை மட்டுமே வைத்துக் கொண்டு அதற்கும் சேர்த்து உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பதே உண்மை. மீண்டும் உறுதியாக சொல்கிறோம். சென்னை பிரஸ் கிளப் என்பது நாங்கள் முறைப்படி பதிவு செய்த சங்கம். அது எங்கள் சொத்து எங்கள் உரிமை ஒருபோதும் அதை விட்டுக் கொடுக்க அனுமதிக்க மாட்டோம்.

ச.விமலேஷ்வரன், பொதுச்செயலர், சென்னை பிரஸ் கிளப்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.