இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவருக்கு இதெல்லாம் கம்மி !
18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்கச் செய்திருக்கின்றார் சென்னையைச் சேர்ந்த குகேஷ். இவருக்கே அவர் பயிலும் பள்ளியில் விலை உயர்ந்த ஆடம்பர கார் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இவர் சென்னை அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலா பள்ளியில் பயின்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் (Mercedes Benz E Class), எனும் உலக தரம் வாய்ந்த சொகுசு காரே குகேஷ்-க்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
சமீபத்தில், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமிதம் சேர்த்த குகேஷை கௌரவிக்கும் விதமாக பள்ளிக் கூட வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் வாயிலாகவே அவருக்கு இந்த கார் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக லேசர் கண்காட்சி, டிரோன் ஷோ, எலெக்ட்ரிக் நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்தே, குகேஷ்க்கு கார் பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் எம்விஎம் வேல்மோகன் மற்றும் துணை தாளாளர் ஸ்ரீராம் வேல்மோகன் ஆகியோரே குகேஷ்-க்கு காரை பரிசாக வழங்கினர். குகேஷ்-க்கு வழங்கப்பட்டு இருக்கும் இந்த சொகுசு காரின் மதிப்பு 78.50 லட்ச ரூபாக்கும் அதிகம் ஆகும்.
இது வெறும் ஆரம்ப நிலையில் விற்கப்படும் இ கிளாஸின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் இந்திய சந்தையில் மொத்தமாக மூன்று விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இ200 (E200), இ200டி (E200d) மற்றும் இ450 4மேட்டிக் ஏஎம்ஜி லைன் (E450 4Matic AMG Line) ஆகியவையே அவை ஆகும்.
இதன் அதிகபட்ச விலை ரூ. 92.50 லட்சம் ஆகும். இத்தகைய மிக மிக அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஆடம்பர காரையே பள்ளியில் பரிசாக குகேஷ்-க்கு வழங்கி இருக்கின்றனர். இந்த கார் விலையில் மட்டுமல்ல சிறப்பம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கும்.
SK பிரபு ராம்
அந்த அளவிற்கே ஆடம்பர அம்சங்களையும், நவீன கால தொழில்நுட்ப வசதிகளையும் இந்த வாகனம் அதனுள் தாங்கியிருக்கின்றது. அந்தவகையில், புதிய பென்ஸ் இ-கிளாஸ் சொகுசு காரில் 3 ஆம் தலைமுறை எம்பியூஎக்ஸ் சூப்பர் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை வாயிலாக செல்ஃபி வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
இது முற்றிலும் புதிய வசதியாகும். இந்தியர்களைக் கவர வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த அம்சத்த பென்ஸ் வழங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக காருக்குள் இருந்தபடியே வீடியோ காலும் பேசிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல அட்வான்ஸ்டு வசதிகளை இந்த திரை தன்னுள் தாங்கி இருக்கும் கவனிக்கத்தகுந்து.
இதுதவிர, 17 ஸ்பீக்கர்கள் மற்றும் 4 எக்சைடர்கள் கொண்ட பர்மெஸ்டர் 4டி சரவுண்டு சவுண்டு சிஸ்டம், 36 டிகிரி வரையில் சாய்த்துக் கொள்ளும் வசதிக் கொண்ட இருக்கை, தொடை மற்றும் கழுத்து பகுதிகளுக்கான சப்போர்ட்டை வழங்கும் வசதி, சூரிய ஒளி உள்ளே புகா வசதிக் கொண்ட ஜன்னல்கள் போன்றவற்றையும் இந்த ஆடம்பர காரில் பென்ஸ் வழங்கி இருக்கின்றது.
இத்தகைய தரமான ஆடம்பர காரையே குகேஷ்க்கு வேலம்மாள் பள்ளி நிறுவனம் பரிசாக வழங்கி இருக்கின்றது. இதுவே குகேஷின் முதல் சொந்த கார் என அவர் தெரிவித்திருக்கின்றார். ஆகையால், வரும் நாட்களில் அவர் இந்த காரில் வலம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குகேஷ்-இன் சாதனைக்கு உலக அளவில் பாராட்டுக்குள் மழை குவிந்த வண்ணம் இருக்கின்றது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குகேஷ்-க்கு பாராட்டு மழை மட்டுமல்ல பரிசு மழையும் பொழிந்த வண்ணம் இருக்கின்றது. அவர் இந்தியாவிற்கு சேர்த்த பெருமிதத்திற்கு இவை எல்லாம் ரொம்ப சாதாரணமே ஆகும். அவர் தன்னுடைய கிடைத்த பரிசு தொகையில் பத்து லட்ச ரூபாய் வரை வயநாடு நிலச்சரிவு பேரிடர் மீட்பிற்காக நிதி வழங்கி இருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது.!
— SK பிரபு ராம்.