சங்கங்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே அக்கோரிக்கையை நிறைவேற்றியவர் கலைஞர்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சங்கங்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே அக்கோரிக்கையை நிறைவேற்றியவர் கலைஞர்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அக விலைப்படியை 4% சதவீதம் அதிகரித்து, 42% சதவிகிதத்திலிருந்து 46% ஆக உயர்த்தி ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கான 4% அகவிலைப்படியை உயர்த்திதர வழிவகை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையுடன், ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், வா.அண்ணாமலை; தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மா. நம்பிராஜ்; பொதுச்செயலாளர் – அ. வின்சென்ட் பால்ராஜ்; மாநிலப் பொருளாளர் – க. சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

அந்த அறிக்கையில், “ மத்திய அரசின் அரசாணை வெளிவராவிட்டாலும், மத்திய அமைச்சரவையின் ஒப்புத லினை பார்வைக்கு எடுத்துக் கொண்டு ஒடிசா முதலமைச்சர் மாண்புமிகு நவீன் பட்நாயக் அவர்கள் 01.07.2023 முதல் நிலுவைத் தொகையுடன் 4% அகவிலைப்படி உயர்வினை அறிவித்து ஆணை வழங்கியுள்ளார்கள்.

அகவிலைப்படி தொடர்பாக கோரிக்கை வைத்தாலும் கோரிக்கை வைக்காவிட்டாலும் இந்த முறை 01.07.2023 முதல் நிலுவை தொகையுடன் 42% சதவீதத்தில் இருந்து 46% சதவீதமாக உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.” எனக் குறிப்பிட்டு கோரிக்கை விடுத்தி ருந்தார்கள். இதைப்போன்றே, பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கங்களிடமிருந்தும் கோரிக்கைகள் வரப்பெற்றதையடுத்து, அரசு ஊழியர் சங்கங்கள் கோரியபடி அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட்டார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்நிகழ்வை குறிப்பிட்டு பேசிய, வா.அண்ணாமலை, “ முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது முதுகுத் தண்டுவட பிரச்சினை காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த சமயத்தில் மத்திய அரசு அகவிலைப்படியினை உயர்த்தி அறிவித்தார்கள். நிதித்துறை செயலாளர் திரு . ஞான தேசிகன் இ.ஆ.ப., அவர்கள் கலைஞர் அவர்களை சந்திப்பதற்கு சென்ற போது, மத்திய அரசு அகவிலைப்படி உயர்வினை அறிவித்து விட்டார்கள்.

வா.அண்ணாமலை.
வா.அண்ணாமலை.

எந்த சங்கமாவது அகவிலைப்படி உயர்வினை கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்களா? என்று கேட்டார். இதுவரை எந்த சங்கமும் அகவிலைப்படி உயர்வு கேட்டு அறிக்கை வெளியிடவில்லை. என்று நிதித்துறை செயலாளர் அவர்கள் பதிலளித்தார். அப்படியானால் சங்கங்கள் அகவிலைப்படி உயர்வு கேட்பதற்கு முன்பாகவே அகவிலைப்படி உயர்வினை அறிவித்து ஆணையினை வெளியிடுங்கள் என்று தெரிவித்தவுடன், நிதித்துறை சார்பில் உடன் ஆணையினை வெளியிட்டு பெருமை சேர்த்தார்கள்.

தந்தை ஆட்சி காலத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வை தற்போது தமது ஆட்சி காலத்தில் நினைவுபடுத்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரது நடவடிக்கைக்கு நன்றி!” என்கிறார், நெகிழ்ச்சியோடு

-இளங்கதிர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.